நானே ராஜா, நானே மந்திரி, நானே தளபதி, நானே சிப்பாய் : I am a one-man army…

என்னுடைய முதல் விமர்சனக் கட்டுரை ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு எழுதியது. அதற்கு முன்னால் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி படிகள், இலக்கிய வெளிவட்டம் ஆகிய காலாண்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்பத்திரிகைகளில் நான் தான் பிரதான எழுத்தாளன். நாங்கள் ஒரு குழுவாகவே செயல்பட்டோம். ஆனால் அந்தப் பத்திரிகைகளிலேயே ஜே.ஜே. நாவலுக்கான என் விமர்சனத்தை வெளியிடவில்லை. அப்போதிருந்து தொடங்கி இன்று வரை என் எழுத்துக்கு எதிர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்கள் பற்றி எனக்குக் கவலையே இல்லை. … Read more

தம்பிக்கு ஒரு கடிதம்…

அன்புத் தம்பி பெருமாளுக்கு, நான் உன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு பதிலுக்கு நீ என்னைத் திட்டி எழுதியிருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.  அதைப் படித்து நேர விரயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.  ஆனால் அதில் நீ சொல்லியிருந்த ஒரே ஒரு விஷயம் பற்றி உனக்கு ஒரு பால பாடம் எடுக்கலாம் என்றே இதை எழுதுகிறேன்.  அதில் செல்வதற்கு முன்னால் இன்னொன்று.  நீ நல்லவன்.  இன்றைய உலகில் நல்லவர்கள் அரிதாக இருப்பதால் உன்னை எனக்குப் பிடிக்கும்.  அதனால்தான் … Read more

வாழை: இரண்டு திரவங்களைக் குறி வைத்து வெற்றியடைந்த திரைப்படம்

ஒன்று, விந்து.  இரண்டு, கண்ணீர். தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு.  ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும்.  அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிப்பார்கள்.  கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் இருப்பார்கள்.  வாழை படத்தில் வரும் டீச்சர் … Read more

டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…

என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.  அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள்.  கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது.  அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு.  இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு.  நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது.  ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல.  அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது.  … Read more

ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் என்று தெரிந்தது பல வாசகர்கள் எனக்கு ஆசிரியர் தின வணக்கம் அனுப்பியதால். இல்லாவிட்டால் இன்று ஆசிரியர் தினம் என்றே எனக்குத் தெரிந்திராது. பிறகு ஆசிரியர் தினம் என்றால் என்ன, இன்று ஏன் ஆசிரியர் தினம் என்று பார்த்தேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவாக இன்று ஆசிரியர் தினமாம். நான் இளம் வயதில் தத்துவம் பயின்ற போது ராதாகிருஷ்ணனைப் படித்து அவரை நிராகரித்திருக்கிறேன். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பிரமுகர்களில் எனக்கு அம்பேத்கரைத் தவிர வேறு எவரையுமே … Read more

The Existential Weight of Teaspoons (விரைவில் வெளிவர இருக்கும் குறுநாவல்)

Dear Charu, I have been following you for a long time and have previously sent you the donation. When possible, I will send more. Thank you for your great service to the humanity—you are a saint. It’s rare to see someone with your attitude in today’s world, and I truly appreciate it.I am curious, though—you … Read more