அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன?

என் மைத்துனர் – அவந்திகாவின் தமையன் – தன் இரண்டு தங்கைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.  அவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார்.  மைத்துனர் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் ஒரே மகளை வளர்த்தார்.  இப்போது அவர் வயது அறுபத்தைந்து.  அறுபது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போல் ஓடியாடிக்கொண்டிருப்பார்.  மது, மாது, சூது, புகை என்று எந்தப் பழக்கமும் இல்லை.  வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு.  இதுதான் அவர் வாழ்க்கை.  நண்பர்களுடன் … Read more

கடவுளிடம் கேட்க எதுவுமில்லை…

ஒருவழியாக வீடு கிடைத்து விட்டது.  அடையார் காந்தி நகர்.  அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில்.  நான் இப்போது கோவிலுக்குச் செல்வதில்லை.  அந்த நேரத்தில் கூட எழுதலாம் என்ற ஒரே காரணம்தான்.  கோவிலுக்கு எதற்காகச் செல்கிறோம்?  இறை சக்தியிடம் வேண்டிக் கொள்வதற்காக.  பிரார்த்தனை செய்து கொள்வதற்காக.  எனக்குத்தான் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லையே?  ம்ஹும்.  எனக்கு புக்கர் பரிசு வேண்டும்தான்.  அதுகூட எதற்கு என்றால் என் எழுத்து ஆங்கில இலக்கிய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான்.  … Read more

A Story of a Berserk Mind

முன்குறிப்பு: இந்தக் கதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வீடு என்ற நாவலில் வரும் ஒரு அத்தியாயம்.  வீடு என்பது தற்போதைய தலைப்புதான்.  நாவல் வெளிவரும்போது தலைப்பை மாற்றி விடலாம் என்று இருக்கிறேன்.  இந்தக் கதை என் உறவினர் பலரையும் புண்படுத்தும்.  மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.  அவர்கள் என்னை எப்படிப் பழிவாங்க நினைக்கிறார்களோ அப்படிப் பழிவாங்குவது அவர்களின் உரிமையும் சுதந்திரமும் ஆகும்.  அதில் நான் குறுக்கிட முடியாது.  சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.  மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம். … Read more

A Story of a Berserk Mind

Berserk என்ற மனநிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நடுரோட்டில் நின்று கொண்டு கையிலிருக்கும் கத்தியால் எதிரே வருவோரையெல்லாம் குத்துபவன் பெர்செர்க் மனநிலையில் இருப்பவன் எனலாம். அம்மாதிரி மனநிலையில் நின்று ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும்? அதைத்தான் காலையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கதைக்காக என் குடும்பம் குலையலாம். பல உறவுகள் என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிப் போகலாம். என் மீது வழக்குத் தொடுக்கப்படலாம். என் உயிருக்கே கூட பங்கம் வரலாம். அப்படிப்பட்ட ரத்தவிளாறுக் கதை அது. கதையில் முதல் … Read more

25. மார்க்கி தெ ஸாத்: Philosophy in the Bedroom

எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு என்பதே என் எண்ணம்.  ஆனாலும் இலக்கிய சமாச்சாரங்கள் எதுவும் மறப்பதில்லை.  அதில் மட்டும் அபார ஞாபகமுண்டு.  மற்ற லௌகீக விஷயங்கள் எல்லாமே நினைவிலிருந்து காணாமல் போய் விடும். சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கி தெ ஸாத்-இன் ஃபிலாஸஃபி இன் தெ பெட்ரூம் நாவலை வாசித்த போது மார்க்கி, உலகில் தன் அன்னையின் யோனியை ஊசி நூலால் தைக்கக் கூடிய பெண்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்வதாக எழுதியிருந்ததும், … Read more

அழையா விருந்தாளி – 3

இந்த அழையா விருந்தாளியே ஒரு புத்தகமாகப் போகும் போல் இருக்கிறது. எனக்கும் இக்கடிதங்களை குப்பையில் போடுவதற்கு விருப்பம் வர மாட்டேன் என்கிறது. ஏனென்றால், இதெல்லாம் இன்றைய சமூக எதார்த்தத்தின் ஆவணங்கள். ஒரு காலத்தில் பிராமணர்கள் என்றால் அங்கேதான் ஞானமும் அறிவும் கொட்டிக் கிடந்தது. அதைக் கண்டுதான் அரசன் முதல் ஆண்டி வரை அஞ்சினான். அரசர்களே காலில் விழுந்தார்கள். ஆனால் இன்று பிராமணர்கள் என்றால் அதற்கு உதாரண புருஷர்களாக விளங்குவது எஸ்.வி. சேகரும் மதுவந்தியும் அவர்களைப் போன்றவர்களும்தான். இலக்கியம் … Read more