பார்த்த ஞாபகம் இல்லியோ?
இந்தப் புகைப்படத்தை ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். முகம் பார்த்தது போல் உள்ளது. யார் என்று ஞாபகப்படுத்த முடியவில்லை.
இந்தப் புகைப்படத்தை ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். முகம் பார்த்தது போல் உள்ளது. யார் என்று ஞாபகப்படுத்த முடியவில்லை.
நாளை புக் பாய்ண்டில் செங்குருதி, அவன் என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப் பட இருக்கின்றன. நான் வருவேன். முடிந்தவர்கள் வரலாம். மாலை 5.30.
சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என் வாசகர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான வட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போதைய எக்ஸைல் நாவலை மூவரிடம் படிக்கக் கொடுத்து மூவரும் அது போரடிக்கிறது என்று சொன்னதையும், அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் எனக்குள் ஒரு திமிர் உண்டு. மூவருக்கும் போரடித்தால் மூவருக்கும் புரியவில்லை போல என்று எடுத்துக் கொண்டு விட்டேன். ஆனாலும் அதை மேலும் செம்மையாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அது இன்னமும் … Read more
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வாசகர் எழுதியிருந்தார்… எக்ஸைலின் பக்கங்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே, ஒரு நல்ல படைப்புக்கு அளவு, அதாவது பக்கங்களின் எண்ணிக்கை முக்கியமா என்ன என்று. அது ஒரு அருமையான கடிதம். எக்ஸைலை முடிக்கும் வரை யாருக்கும் பதில் எழுதுவதில்லை என்பதால் அவருக்கும் எழுதவில்லை. எனக்கு 200 பக்க நாவல்தான் உத்தமம். 400 என்றால் ஓகே. ஆயிரம் பக்கமெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான் என்று தோன்றும். ஆனால் என் நண்பன் தருண் மூன்று நாவல்களையுமே ஆயிரம் … Read more
ஹலோ சாரு, கோச்சடையான் பட விமர்சனம் எழுதுங்கள்.உங்களின் காரசார வாள்முனை போன்ற கூர்மையான வார்த்தைகளால் விமர்சியுங்கள்.செய்வீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி… விக்கி ரெட் அன்புள்ள நண்பருக்கு, யாரோ எதையோ வைத்து சந்தோஷப்படுகிறார்கள். அதை ஏன் நாம் கெடுக்க வேண்டும்? எந்திரன் படத்தை விமர்சித்தேன். குக்கூ விமர்சித்தேன். பரதேசி விமர்சித்தேன். இதெல்லாம் நம் சமூகச் சீரழிவின் அடையாளங்கள். சமீபத்தில் யாமிருக்க பயமே என்ற சாக்கடையில் விழுந்து எழுந்தேன். அந்தப் படம் தான் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாம். குடும்பம் … Read more
ஒரு வாரம் முன்பு ஒரு கல்லூரி மாணவி எனக்கு ஒரு லிங்க் அனுப்பி இருந்தார். The Hindu நாளிதழில் வெளியான கட்டுரை அது. படித்து விட்டு என் கண்கள் கலங்கி விட்டன. மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்வில் அவர்கள் கண்ட அற்புதத் தருணங்களைப் போல் இருந்தது கட்டுரையாளர் விவரித்த விஷயம். நண்பர்களுக்கெல்லாம் அந்த இணைப்பை அனுப்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு தமிழ் இந்துவில் வந்திருக்குமா, வருமா என்று தினமும் தேடினேன். இன்று வந்திருக்கிறது. படித்துப் … Read more