கேள்வி பதில் : உண்மையும் பொய்யும்…

டியர் சாரு, நான் முப்பது வயதான இளைஞன். தங்களது எழுத்துக்களை ஐந்து ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களையோ உங்கள் எழுத்தையோ விமர்சிக்கும் அளவு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை.  ஆனால் தங்களிடம் வியந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்.  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சமூகத்தில் எப்படி உங்களால் ஒரு கலகக்காரரைப் போல் வாழ முடிந்தது? அதுவும் உங்கள் சமகால எழுத்தாளர்கள்  எல்லோரும் தங்களை Intellectual ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் நிலையில், எப்படி உங்களால் இந்தச் … Read more

மைக்கேல் ஜாக்ஸன் : மீள முடியாததோர் இசைக் கனவு

முன்குறிப்பு: மைக்கேல் ஜாக்ஸன் இறந்த போது உயிர்மையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மனுஷ்ய புத்திரனின் தூண்டுதல் இல்லாவிட்டால் எழுதப்பட்டிருக்காது.  அந்தத் தருணங்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.  மனுஷுக்கு நன்றி. *** உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் சென்ற மாதம்தான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விடுவார் என்ற கொடுங்கனவு ஒன்றைக் கண்டு அவருடைய த்ரில்லர், பேட் , டேஞ்ஜரஸ், ஹிஸ்டரி போன்ற ஆல்பங்களைக் கேட்டேன். விரைவில் மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் The Jacksons: An … Read more

இசை பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் அடியேன்…

வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். இசை பற்றிய நிகழ்ச்சி என்பதால் என் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.  இந்த வேளையில் ”வாழ்வது எப்படி?” என்ற என் தொகுப்பில் உள்ள மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு நான் பேசுவதைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.