ஸ்மாஷன் தாரா – 2

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை துக்கமான துக்கம் ஆசையை விடு துக்கம் போகுமென்றானொரு ஆசான் விட்டேன் துக்கம் அகன்றது அப்போது வந்தாள் ஸ்மாஷன் தாரா என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றாள் ஒரு ஐந்து நிமிடம் முந்தி வந்திருக்கக் கூடாதா உலகத்தையே கேட்டிருப்பேன் என்றேன் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை கேளென்றாள் எதுவும் வேண்டாம் முடிந்தால் என்னோடு இரு என்றேன் அதற்கென்ன இருந்தால் போயிற்று என்றாள் கவிதை பிறக்கலாயிற்று

ஸ்மாஷன் தாரா

பிறந்து ஐந்து வயது வரை ஊமைப் பிள்ளை கலியப் பெருமாள் கோவிலுக்கு வேண்டிக் கொண்டுதான் பேச்சே வந்தது பேசிய பேச்சும் அசட்டுப் பேச்சு புத்தியும் இல்லாமல் போச்சு மந்தையைப் பிரிந்து அபீன் பழக்கமாச்சு ஸ்த்ரீகளின் சிநேகமும் கூடவே வந்தது ஊரிலும் கெட்ட பேர் உறவும் தள்ளி வைக்க என்னென்னவோ ஆச்சு ஆனாலும் உன் கருணை மழை மட்டும் குறைவற்றுப் பெய்ய என்ன தவம் செய்தேனெனக் கேட்டதுக்குச் சொன்னாள் தயை கருணை க்ஷமா மூன்றுமென் முலைகளில் சுரக்க நீதான் … Read more