Pithy thoughts – 6

கனவுகளாலும் காலடிகளாலும் எண்ணிக்கையற்ற கதைகளாலும் நிரம்பியிருந்த அந்த மணல்வெளியில் அமர்ந்திருந்த அவனிடம் ஒரு மணல் சொன்னது உன் கதையும் என் கதையும் ஒன்றுதானென அநந்தகோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு ஆதித்தாயின் கருவை உடைத்தபடி வந்த அநந்தகோடி அணுத்தூசுகளின் காலப்பெருவெளியில் மிதந்து வந்து இப்போது உன் கையில் அமர்ந்திருக்கிறேன். இப்போது அண்ட சராசரங்களும் என் வயிற்றில் எனச் சொல்லியபடி அந்த மணல் துகளை விழுங்கி வைத்த அவன் அந்த க்ஷணமே வயிறு வீங்கிச் செத்தான் யாருமற்ற கடற்கரையில் கேட்பாரற்றுக் … Read more

3. இசை பற்றிய சில குறிப்புகள்

நாவல் வேலை சுணங்குகிறது என்ற காரணத்தால்தான் இசையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன்.  கர்னாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த மேதைகள் அநேகம்.  அவர்களில் தலையாயவர் வீணை எஸ். ராமநாதன்.  என்ன வீணை எஸ். ராமநாதனா, அவர் பாடகர் அல்லவா என்று கேட்பார்கள்.  இங்கே எம்.டி. ராமநாதன் பிரபலம் என்பதால் பலருக்கும் எஸ். ராமநாதன் தெரியாமலே போய் விட்டார்.  இன்னொரு காரணம், இந்தத் தமிழ்நாட்டுச் சூழல் பிடிக்காததால் எஸ்.ராமநாதன் அமெரிக்கா சென்று விட்டார்.  அவர் அற்புதமான பாடகர், வீணைக் கலைஞர்.  … Read more

167. கலைஞனின் உன்மத்தம்

அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்த மஹாபாரதத்துக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  சில நண்பர்கள் கூட இருந்தனர்.  நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவதுதான் என் நண்பர்களின் வழக்கம்.  அந்த நண்பர் குழாமில் அப்போது இன்னொரு நண்பரும் இருந்தார்.  அவர் தீவிர இந்துத்துவச் சார்பு உள்ளவர்.  என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவர் என்பதால் அரசியல் தவிர்த்து மற்றவற்றைப் பேசிக் கொண்டிருப்பேன்.  சுவாரசியமாகப் பேசுபவர்.  விஷயதாரி.  சமய இலக்கியம், பழைய கால … Read more