Pithy thoughts – 5

நான் இங்கே வந்ததிலிருந்து அவனைப் பார்க்கிறேன் ஒரு நாளும் தவறியதில்லை நெடுஞ்சாலையின் எதிர்ப்பக்கத்தில் படுத்திருக்கிறான் இடம் மாறியதேயில்லை அதே இடம் எப்போது இங்கே வந்தேனென்று ஞாபகமில்லை ஆனால் நீண்ட காலமாயிற்று என்பது மட்டும் நிச்சயம் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் காலையில் வந்தால் படுத்திருக்கிறான் மாலையில் வந்தால் படுத்திருக்கிறான் இரவில் வந்தாலும் படுத்திருக்கும் உருவம் தெரிகிறது பிரேதமென்றால் அழுகியிருக்காதா துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தியிருக்க மாட்டார்களா ஒருவேளை சயனத்திருக்கும் சிலையோ யாரும் வணங்குவதாகவும் தெரியவில்லை ஒருநாள் கூச்சத்தை விட்டு அருகில் … Read more

Pithy thoughts – 3

நூற்றாண்டுகளாய் நின்று கொண்டிருக்கிறேன் தனிமையும் சோர்வும் அயர்ச்சியும் விரக்தியும் கொண்டு. மழை கண்டேன் புயல் கண்டேன் அக்னியும் சுட்டெரித்தது சர்ப்பங்கள் ஊர்ந்து நெளிகின்றன நாய்கள் சிறுநீர் கழிக்கின்றன கல் கண்ணீர் விடுகிறதென வணங்க ஆரம்பித்ததொரு கூட்டம் கற்கள் மீது விரோதங் கொண்டவர்கள் மூளியாக்கினர் என்னை ஆனால் வர வேண்டியவனை இன்னும் காணோம்…

Pithy thoughts – 2

அகங்காரமே என் சிருஷ்டியாக வெளிப்படுகிறது. அதற்கான அவியே அடக்கமும் மதுரமும். *** நிச்சலனமாக இருக்கிறது ஏரி சரேலென இறங்கியவொரு தனித்த பறவை மீனொன்றைக் கவ்விச்செல்கிறது படபடக்கிறது மனம்