Pithy thoughts – 17

பூஜ்யம் ஒன்று பூஜ்யமும் ஒன்றும் பூஜ்யம் பூஜ்யமும் ரெண்டும் பூஜ்யம் பூஜ்யமும் மூணும் பூஜ்யம் பூஜ்யமும் பூஜ்யமும் பூஜ்யம் ஒன்றும் பூஜ்யமும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்றும் ரெண்டும் ஒன்று ஒன்றும் மூணும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்று பூஜ்யம் ஒன்று பூஜ்யம் ஒன்றுக்குள் பூஜ்யம் பூஜ்யத்துக்குள் ஒன்று பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று ஒன்று ஒன்று

Pithy thoughts – 16

பிரம்மனின் கனவில் மழை பெய்து கொண்டிருக்கிறது மழையில் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அழிந்து போன உலகத்தில்   திரும்பவும் தலையெடுக்கிறது காலம் பிரம்மனின் கனவில் மேகங்கள் திரள்கின்றன…

Pithy thoughts – 15

நேற்று வந்த வெர்னரின் கடிதத்தைப் படித்ததிலிருந்து பாவ்லோ கொய்லோவின் சாகசத் தனிமை ஞாபகத்தில் வந்து மோதுகிறது தென் ஃப்ரான்ஸில் மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில் ஆறு மாதம் பிறகு ப்ரஸீலில் குடும்பத்தோடு ஆறு மாதம்  வால்டன் வனத்தில் தோரோ வாழ்ந்தது இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் வனம் அலுத்ததும் நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ என் ஜெர்மானிய நண்பன் வெர்னர் முப்பத்து மூன்று வயது  ஆய்வு மாணவன் குடும்பமில்லை உற்றமில்லை சுற்றமில்லை தேசமுமில்லை பணம் … Read more