விட்டு வந்த இடம் : அருண்மொழி நங்கை
வழக்கம் போல் என்னை அசத்திய எழுத்து. ஒரு பிரமாதமான வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார் அருண்மொழி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும். நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.
வழக்கம் போல் என்னை அசத்திய எழுத்து. ஒரு பிரமாதமான வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார் அருண்மொழி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும். நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.
அன்புள்ள நண்பர் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு, தங்களை என் நண்பர் என்று கருதுவதால்தான் கீழ்க்கண்ட தங்களின் முகநூல் குறிப்புக்குப் பதில் எழுதுகிறேன். பாஜக ஆட்கள் என்றால் புறம் தள்ளி விட்டுப் போயிருப்பேன். இப்போது தங்கள் முகநூல் குறிப்பு: எழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கையை இப்போதுதான் படித்துமுடித்தேன். சிறப்பு. சிறப்பு. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி பல. உண்மையில் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள்தான். தனிப்பட்ட முறையில் … Read more
பின்வரும் இரண்டு கடிதங்களும் முதல்வர் திரு. ஸ்டாலினுக்கு எழுதி குமுதத்தில் வெளிவந்தவை. நீண்ட கடிதம் என்பதால் இரண்டாகப் பிரிக்க நேர்ந்தது. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தங்களை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். சற்றே தாமதம் ஆனாலும் அது நடந்து விட்டது. வாழ்த்துகள். அதே சமயம் ஒரு சவாலான சூழ்நிலையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். அந்த சவாலை எதிர்கொள்ள அதிகாரிகள் முழுமூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். … Read more
முன்குறிப்பு: சாரு பின்வரும் சிறுகதை ராம்ஜி நரசிம்மன் எழுதியது. முகநூலில் இருந்தது. கவனிக்காமலேயே போயிருப்பேன். இன்று காயத்ரி சொன்னதால் அவர் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்து படித்தேன். இந்தக் கதையை அவர் என்னிடம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார். இதேபோல் அவரிடம் ஒரு 2000 கதை இருக்கும். அந்த ரெண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தை என்னிடம் சொல்லியிருப்பார். அவரும் நானும் சவேரா ஓட்டல் ப்ரூ ரூம் திறந்த வெளி காப்பிக் கடையில்தான் சந்திப்போம். அங்கே பொதுவாக சினிமாக்காரர்களும் (அவர்கள் … Read more
ஜூன் 6 மாலை ஆறரை மணிக்கு ஸூமில் வாசகர் வட்டச் சந்திப்பு நடக்க உள்ளது, வருகிறீர்களா என்று கேட்டிருந்தேன். எனக்கு முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் – இதுவரை ஒரு முறை கூட கடிதத் தொடர்பு இல்லாதவர்களைச் சொல்கிறேன் – கலந்து கொள்ளவா என்று கேட்கிறார்கள். அப்படி ஒருவரை “உங்களை எனக்குத் தெரியாதே?” என்று பதில் எழுதினேன். உடனே அவர், முன்பு ஒரு கடிதம் உங்களைத் திட்டி எழுதியிருந்தேனே என்று எழுதியிருக்கிறார். இப்படி இருக்கிறது உலகம். என் வாசகர் … Read more
Ghada Al-Saman பற்றியோ Mikhael Naimy பற்றியோ இங்கு லெபனானில் யாருக்கும் எதுவும் தெரியாது. மியா கலிபா, நான்சி அஜ்ரம் (பாடகர்கள்) என்றால் கட்டுக்கட்டாகப் பேசுவார்கள். எழுத்தாளர்களின் நிலை இங்கும் அப்படித்தான். பெய்ரூட் நைட்மெயார் என்றால் கூகுள் செய்துதான் லெபனியர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இங்கு இலக்கியத்தின் நிலை இதுதான். சாரு லெபனான் வந்தபோது இந்த ஊர் எழுத்தாளர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ஒவ்வொரு லெபனிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போதும் அவருடைய கண்கள் மின்னும். அவ்வளவு ஈடுபாட்டோடு … Read more