அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சமீபத்தில் ஒரு நண்பர் அ. மார்க்ஸை எங்கே பார்க்க முடியும் என்று கேட்டார். மனிதன் எங்கெல்லாம் துயருறுகின்றானோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றானோ அங்கெல்லாம் அ. மார்க்ஸைப் பார்க்க முடியும் என்றேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு என்கௌண்டர் மரணம். அடுத்த நாள் அந்த இடத்தில் அ. மார்க்ஸ் நிற்கிறார். எனக்கு அ. மார்க்ஸை நினைக்கும் போதெல்லாம் Saint Paul of the Cross ஞாபகம் வருவார். துயரப்படுவோரையெல்லாம் தேடித் தேடிப் பணி செய்த ஒரு மகான் … Read more

லேடி காகா…

எப்படி எழுதுவீர்கள், எழுதுவதற்கு எப்படிப்பட்ட சூழல் தேவை என்று பலமுறை என்னிடம் நண்பர்களும் வாசகர்களும் கேட்பதுண்டு. அதற்கு உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. ஆனால் ஒரு நாளில் எழுதத் தொடங்குவதற்கு முன் இப்படி ஏதாவது ஒரு பாடலைக் கேட்டு விட்டுத்தான் தொடங்குவேன். இம்மாதிரி இசைதான் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இன்று ஔரங்கசீப்பின் மூன்றாம் பாகத்தை அனுப்ப இருக்கிறேன். இப்போது நடப்பில் இருப்பது மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருக்கும். நாவலில் அப்படி நான் பாகம் பாகமாகப் … Read more

கோக் அடிக்‌ஷன்

டியர் சாரு, சில வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பாக்ஸ்தானி கஜ’லின், கோக் ஸ்டியோ கவர் ஸாங் ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். அப்போது அது எனக்கு வாரக்கணக்கில் ரிப்பீட் மோடில் ஓடியது. அதே காலகட்டத்தில்தான் ஆத்திஃப் அஸ்லம், ராஹத் ஃபதே அலிகான் போன்றவர்களை தொடர் ப்ராட்டஸ்ட்கள் மூலம் “முதிர் கண்ண” பாலிவுட் குரல்கதறர்கள் (gaலா phaடுக்கள்) துரத்தி அடித்தனர். எனக்குச் சரியாக நியாபகமில்லை. நீங்கள் கண்டிப்பாகப் பகிர்ந்திருப்பீர்கள். ஆனாலும் ஒளரங்கசீப் எனும் சூப்பர் டூப்பர் “வெப் சீரீஸ்” ஓடிக்கொண்டிருக்கும் … Read more

விஷமும் மருந்தும்…

இலக்கியம் என்பது விஷமும் மருந்துமாக செயல்படுகிறது.  ஹோமியோபதி மருந்து மாதிரி.  ஹோமியோபதி மருந்தின் மூலகங்களைப் பற்றிப் படித்தால் அவற்றில் பெரும்பாலானவை கொடிய விஷம் என்பதை அறிவீர்கள்.  கடுகளவு உண்டாலே மரணம்தான்.  ஆனால் அதைப் பல நூறு முறை நீர்த்துப் போகச் செய்துதான் நமக்கு மருந்தாகத் தருகிறார்கள்.  அதையும் நூறு மில்லி நீரில் பத்து சொட்டுதான் சேர்க்க வேண்டும்.  அப்படித்தான் இலக்கியமும்.  அது தெரியாமல் அதில் காலை விட்டால் அழிவுதான்.  எண்பதுகளில் என்னோடு ஒரு நண்பர் பழகினார். சராசரியாக … Read more

நண்பர்கள்

21 தினங்கள் 12 உருப்படிகளுக்காக மாடு மாதிரி வேலை செய்தாள் அவந்திகா. மகன், மருமகள், சிங்கம் சைஸில் இரண்டு கோல்டன் ரெட்ரீவர் நாய்கள், நாய் சைஸில் ஒரு பெர்ஷியன் பூனை, எங்கள் வீட்டுப் பூனைகள் ஐந்து – எல்லாம் சேர்த்து பன்னிரண்டு. சமயம் பார்த்து பணிப்பெண்ணும் நின்று விட்டதால் எல்லா வேலையும் அவந்திகா தலையில்.  உட்காரக் கூட முடியாமல் பன்னிரண்டு மணி நேர வேலை.  நானும் கூட மாட ஒத்தாசை செய்வேன்.  ஆனால் கடின வேலைகளை என்னால் … Read more

நெடுமுடி வேணு: மம்முட்டியின் அஞ்சலி

நான் அஞ்சலிக் குறிப்புகள் எதுவும் எழுதுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். பல சமயங்களில் இறந்தவர் பற்றிய கசப்பான நினைவுகளே மனதில் கிளர்ந்து வரும். அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் என்னை அவமதித்தவர்களாக இருப்பார்கள். அல்லது, வேறு விதமான கசப்புணர்வு எழும். உதாரணமாக, ஊர் உலகமே கொண்டாடிய ஒரு நடிகர் இறந்த போது என் நண்பர்களும் ஊர் உலகமும் கண்ணீர்க் கடலில் ஆழ்ந்தது. எனக்கோ அவர் பற்றிய ஒரு கசப்பான நினைவு. ஒரு சினிமாவில் அவர் ஹிந்துக்களை அவதூறு செய்து … Read more