பொன்னியின் செல்வன் : மதிப்புரை

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது.  நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை.  தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம்.  ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள்.  என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை.  அப்படி ஒரு குப்பை.  ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை.  என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத் … Read more

பொன்னியின் செல்வன் டிக்கட் (ஒரு குறுங்கதை)

காலையில் எங்கள் குடியிருப்பு மேனேஜர் தன் குடும்பத்துக்காக நான்கு பொன்னியின் செல்வன் டிக்கட் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று என் பத்தினியிடம் கேட்டிருக்கிறார்.  மேனேஜரால்தான் என் அன்றாட வாழ்க்கை பளுவில் தொண்ணூறு சதவிகிதம் குறைகிறது.  நானாவிதமான கடைகளுக்குச் செல்வதிலிருந்து மின்வாரியம், ரேஷன் கடை என்று எல்லா அலைச்சல்களையும் செய்வது அவர்தான்.  பத்தினியும் தன் செல்வாக்கைக் காண்பிப்பதற்காகவோ அல்லது வேறு நல்ல எண்ணத்திலோ நான் சாருவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று மேனேஜரிடம் வாக்குக் கொடுத்து விட்டாள்.  … Read more