Month: October 2022
ஹிந்து மதம் (2)
இந்து மத எதிர்ப்பும், இந்துத்துவ வெறியும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன. இதிலிருந்து நோகாமல் தத்துவம், கலை, பண்பாடு போன்ற உயர்ந்தவற்றை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது?ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும்போது அது மதத்தை பாதிக்கிறது எனும்போதே மதம் ஜாதிகளை காக்கிறது என்றுதான் ஆகிறது. நாங்கள் இந்துக்களாக இருக்கவே விரும்பவில்லை. அது எங்களை ஜாதியை சொல்லி இழிவு செய்கிறது என்று ஒரு சாரார் புகார் எழுப்பும்போது அந்த குறைகளை கேட்க, கலைய இந்துமத அமைப்பிற்குள் என்ன … Read more
தமிழிலிருந்து ஆங்கிலம்
சுந்தர ராமசாமி அவர் காலத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகக் கருதப்பட்டார். அவருடைய ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது ஜே.ஜே. சில குறிப்புகள். அந்த நாவல் ஆங்கிலத்தில் எப்படி கசாப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆங்கில நாவலாசிரியர் விளாசுகிறார். https://www.thehindu.com/books/literary-review/Review-A-new-translation-of-Sundara-Ramaswamy%E2%80%99s-1981-classic-JJ-Some-Jottings/article16442835.ece
இரண்டு புகைப்படங்கள்
ஹிந்து மதம் என்ற தலைப்பிட்ட சென்ற குறிப்போடு தொடர்புடைய இரண்டு புகைப்படங்கள். இரண்டுமே மனோகரன் மாசாணம் எடுத்தவை. இடம்: பாங்காக்கில் உள்ள சொர்ண புத்தர் ஆலயம்.
ஹிந்து மதம்
நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஜாதி மனித சமூகத்தின் அவலங்களில் ஒன்று. ஆனால் ஜாதிப் பிரிவினை ஹிந்து மதத்தில் மட்டுமே இருந்தது இல்லை. எல்லா தேசங்களிலும் இனங்களிலும் ஜாதி என்பது வெவ்வேறு பெயர்களில் இருந்துள்ளது. குறிப்பாக, ஆஃப்ரிக்க கண்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜாதி இருந்தது. அதை அவர்கள் இனம் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் தனி மொழி இருந்தது. அதாவது, ஐயாயிரம் பேரை மட்டுமே கொண்ட ஒரு இனத்துக்கென்று ஒரு தனி மொழி. அவர்கள் அத்தனை பேரும் … Read more
நிறமேறும் வண்ணங்கள் (சிறுகதை) : அராத்து
புக்கட் பங்களா தெருவில் இருக்கும் ஒரு அமெரிக்கன் பப்பில் இருந்து அவர்கள் வெளிவந்தார்கள். குதூகலமாக ஆடிக்கொண்டே வெளியே வரும் அவர் ஒரு எழுத்தாளர். அந்த வண்ணமயமான இடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாமல் சட்டைப்பாக்கெட்டில் கருநீல வண்ணத்தில் பாஸ்போர்ட் தலை நீட்டிக்கொண்டு இருந்தது. கதை அவரின் பாக்கெட்டில் நுழைந்து அவரின் பாஸ்போர்ட் பக்கத்தை இரண்டு புரட்டு புரட்டியது. பாஸ்போர்ட்டினுள் இருக்கும் தகவல் மூலம் அவருக்கு வயது 70 . பெயர் ஊர் எல்லாம் பார்த்தால் கதை டிரான்ஸில் (trance) மாட்டிக்கொள்ளும் … Read more