ஒரு வரி

மகாமுனி என்ற படம் 2019இல் வந்திருக்கிறது. அதில் ஒரு காட்சியில் நாயகி நாயகன் ஆர்யாவிடம் உங்க கிட்ட சாரு எழுதின கலகம் காதல் இசை புக் இருக்கா எனக் கேட்கிறாள். ஆர்யா இருக்குங்க என்கிறார். இதை சாத்தியப்படுத்த நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு வரி வருகிறது என்பதைக் கண்டு பிடிக்க அந்தப் படம் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நோ காமெண்ட்ஸ். https://www.facebook.com/nirmal.mrinzo/videos/2226986110820672/?mibextid=NnVzG8

த அவ்ட்ஸைடர் – 31

பப்பு லாப்ரடார் இனம்.  ஸோரோ க்ரேட் டேன்.  இரண்டு நாய்களும் அவைகளின் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது என்னைத்தான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.   குணாதிசயங்களில் இரண்டும் இரண்டு வகை.  ஸோரோவுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது, என்னைப் போலவே.  பப்புவுக்கு அது ஜாஸ்தி.  பப்புவை நான் ஏதாவது கடுமையாகத் திட்டி விட்டால் ஒரு நாள் முழுதும் சாப்பிடாது.  நான் நூறு முறை மன்னிப்புக் கேட்டாலும் சாப்பிடாது.  ஆண் நாயாக இருந்தாலும் பெண்கள் மாதிரி அடம்.  நாம் உயிரையே வைத்திருக்கும் இவனா … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!

1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான்.  அப்போது அவன் வயது பதினான்கு.  அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus!  (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652).  அதைக் … Read more

த அவ்ட்ஸைடர் – 30

செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று.  அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன்.  இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன்.  ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள்.  ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது.  அவரை மேடைக்கு அழைக்கவில்லை.  நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 2

2. விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரையும் அல்லது தெரிந்தவர்களை மட்டுமாவது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவில் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்கும் நேரமில்லை.  அவர்களுக்கும் நேரமில்லை.  அரங்கா, காளி ப்ரஸாத், செல்வேந்திரன், மீனாம்பிகை, செந்தில் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஹலோ சொல்லத்தான் நேரமிருந்தது.  அஜிதனோடு நீண்ட நேரம் பேசலாம் என்று இருந்தேன்.  கை குலுக்கியதோடு சரி.  வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்ததால் காலையில் எட்டு மணிக்கு … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 1

வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை ஏழரைக்கு கோவை செல்லும் விமானத்தைப் பிடித்தேன்.  அன்று இரவு பத்து மணிக்கு கோவையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்கின் தொடக்க விழா இருந்தது.  இரவு பத்து மணி என்ற வினோதமான நேரத்துக்குக் காரணம் என்னவென்றால், அன்று பகலிலேயே கோவை வர முடியாத நிலையில் இருந்தேன்.  டிசம்பர் 16 அவந்திகாவின் பிறந்த நாள் என்பதாலும், டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் அன்று … Read more