ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் தொடக்க விழா

கொரோனா அறிமுகம் ஆனதிலிருந்தே வாசகர் வட்ட சந்திப்புகள் எதுவும் நடந்த்தில்லை.  கொரோனா போன பிறகு ஆரோவில்லில் மூன்று நான்கு முறை சந்தித்தோம்.  ஒவ்வொரு சந்திப்பிலும் சுமாராக நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள்.  ஆனாலும் ஆரோவில் வீடு எங்கள் வீடாக இருப்பதால் ஒரு மலையடிவாரத்திலோ கடல்கரையிலோ சந்திப்பது போல் இல்லை. இப்போது ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் தொடக்க விழாவும், அராத்துவின் நூல்கள் வெளியீடும் ஒன்றாக நடக்க உள்ளது.  இரண்டும் பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை … Read more

சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அனீஷ் கிருஷ்ணன் நாயரின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் பலவிதமான எண்ண அலைகளினிடையே சிக்கினேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருவல்லிக்கேணி லாட்ஜில் வைத்து என் மீது ஒரு அபாண்டம் சுமத்தப்பட்ட போது அதை எதிர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் என் உடலில் உள்ள எல்லா ஆடைகளையும் களைந்து விட்டு முழு நிர்வாணமாக எல்லோர் எதிரிலும் பத்து நிமிடம் நடந்தேன். ஆடைகளைத் திரும்ப அணிந்ததால் இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். திரும்ப அணிந்திராவிட்டால் மனநோய் … Read more

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்

1978இலிருந்து 1988 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்ல்லாம்.  அச்சமயத்தில் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியிலிருந்து எம்.டி. முத்துக்குமாரசாமி என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு ஒரு கதை கேட்டு  எனக்குக் கடிதம் எழுதினார். கல்லூரி மாணவர்களே நடத்திய பத்திரிகை அது.  எம்.டி.எம். என்று அழைக்கப்பட்ட அவர் அந்த மாணவர் இதழிலேயே ஸில்வியா என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்ற … Read more

விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழ்

டிசம்பர் 18 அன்று மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை நான் கலந்து கொள்ளும் கலந்துரையாடலும் உண்டு. அந்த அமர்வின் ஒருங்கிணைப்பாளர்: ஜெயமோகன்

சவச்சீலைகளிலிருந்து உடல்களை விடுவிக்கும் எழுத்து: போகன் சங்கர்

”நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.” இந்த மேற்கோள் போகன் சங்கருடையது. என் எழுத்து பற்றி அபிலாஷ், கார்ல் மார்க்ஸ், காயத்ரி, அராத்து, சுனில் கிருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் எழுத்து உலகில் நுழைய இவர்கள் எழுதிய கட்டுரைகள் உதவும். அந்த வரிசையில் என் எழுத்து … Read more