பிள்ளைப்பூச்சியால் வந்த வினை

ஆயுஷ் ஹோமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீராது போல் இருக்கிறது.  இப்போது ஒரு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு தடை போடப்பட்டிருக்கிறது.     நான் பொதுவாக வீட்டில் என் நண்பர்களைப் பார்ப்பதில்லை.  காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த நண்பர் சத்தமாக, “நீங்கள் பைசெக்‌ஷுவலா சாரு?” என்று கேட்டார்.  சமையல் அறையில் இருந்த அவந்திகா சாரூஊஊஊ என்று அலறினாள்.  ஓடிப் போய் என்னவென்று கேட்டேன்.  அந்த ஆளை முதலில் வீட்டை விட்டு வெளியே … Read more

பழகுவதற்கு சாரு எப்படி? – 2

ஆர்த்தோ நாடகத்தை முடித்தாயிற்று, இனிமேலாவது பெட்டியோவை எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன்.  நேற்று ஜெயமோகன் அதைக் கெடுத்தார்.  இன்று வினித் கெடுத்து விட்டார்.  நேற்று நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டுப் பொங்கி விட்டார் போல.  அவரிடமிருந்து இப்படி செய்தி: ”எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள்.” இது நீங்கள் சொல்லி இருப்பது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நெருங்கிய நண்பர் எனக்குப் … Read more

பழகுவதற்கு சாரு எப்படி?

இன்று காலை ஜெயமோகன் மாடல் என்ற ஜெயமோகனின் கட்டுரையைப் படித்து விட்டு செம ஜாலியாகி விட்டேன்.  ஏனென்றால், அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வார்த்தைக்கும் நான் நேர் எதிராக வாழ்கிறேன்.  ஆம், ஒவ்வொரு வார்த்தைக்கும். காலையிலிருந்து அதே நினைவாக இருக்கிறேன்.  ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம் என்று.  அந்த அளவுக்கு நேர் எதிர்.  உடனே ஸ்ரீ, ஸ்ரீராம், ஸ்ரீனி, வினித், ராஜேஷ் நால்வரிடமும் ஜெயமோகனின் கட்டுரையை அனுப்பி “சாரு எப்படி?” என்று அபிப்பிராயம் கேட்டேன்.  சீனி … Read more

நாடக வாசிப்பு

கோவாவில் வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி எந்த நேரத்தில் நாடகம் வாசிப்பீர்கள் என்று கேட்டு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார். அது 21ஆம் தேதி எப்போது உறங்கப் போகிறேன் என்பதைப் பொருத்தது. வீட்டில் இருக்கும்போது ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். இரவு பதினோரு மணி அதிக பட்சம். அதற்கு மேல் கண் விழிக்க மாட்டேன். காலையில் நாலரை அல்லது ஐந்து. அதற்கு மேல் உறங்க மாட்டேன். உறங்க நினைத்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் குயில்களும் கிளிகளும் என்னை … Read more

ஆர்த்தோவாக வாழ்தல்…

பேய் பிடித்தவனைப் போல் படித்து, குறிப்புகள் எடுத்து, நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். ஆங்கிலத்தில்தான் தலைப்பு அமைந்தது. தமிழில் இன்னும் கை கூடவில்லை. ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்று வைத்திருக்கிறேன். வங்காளத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தமிழில் சாத்தியம் இல்லை. நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரைக் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை. நீங்கள் நாவலில், சிறுகதையில் – மதத்தில் கை வைக்காமல் … Read more

வாழ்க்கையும் எழுத்தும்…

சென்ற குறிப்பில் கொஞ்சம் பிழைகள் இருந்தன. இப்போது திருத்தி விட்டேன். அந்தக் குறிப்பில் விடுபட்டுப் போன விஷயம் ஒன்று உண்டு. மதுரையில் நடந்த ரெண்டாம் ஆட்டம் நாடகத்தில் ஒரு பள்ளி மாணவியும் நடித்தாள். வயது பதினேழு இருக்கலாம். ஏன் இதில் நடித்தாய் என்று அவளுக்கும் அடி விழுந்தது. பதினேழு வயதுப் பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறது. நவீன நாடகத்தில் நடிக்கக் கூடாது என்றுமா சட்டம் இருக்கிறது? *** நான் எப்போதுமே என்னுடனான … Read more