கோவா சந்திப்பு

என்னுடைய இருபதாவது வயதிலிருந்து இந்த அறுபத்தொன்பதாவது வயது வரை நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் தத்துவத்தையும் சினிமாவையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். என் அளவுக்கு இந்த மூன்றிலும் பாண்டித்யம் பெற்றவர்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. இதையெல்லாம் நான் ஆணவத்தில் பேசவில்லை. தத்துவத்திலும் இலக்கியத்திலும் சினிமாவிலுமாக முறையே மூன்று பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற ஒருவர் அதை சொல்லிக் கொள்வது எப்படியோ அப்படியே இதைச் சொல்கிறேன். ஃப்ரெஞ்ச் தத்துவத்திலும் இலக்கியத்திலும் பாண்டியத்யம் பெற்ற பல ஃப்ரெஞ்ச் அறிஞர்கள் உண்டு. ஆனால் … Read more

யான் பெற்ற இன்பம்…

சித்த மருத்துவர் பாஸ்கரனை ஞாயிறு தவிர்த்து வேறு எங்கே பார்க்க முடியும் என்று பல நண்பர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர் வசிப்பது வேலூரில். முகவரி: Dr. D. Baskaran, B.S.M.S., 629, Phase 2, Sathuvachari, Vellore 9. email: drbaskaran57@gmail.com phone: 98947 25757 பார்க்கக் கூடிய நேரம்: காலை 9 இலிருந்து பகல் ஒரு மணி வரை. இன்னொரு முக்கிய செய்தி. மருத்துவர் பாஸ்கரனை இன்று கோவையில் சந்திக்கலாம். விவரம்: இன்று (7.7.2023) பிற்பகல் … Read more

தமிழில் எழுத்தாளனாக வாழ்தல்

என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை நெருங்கி வரும் வாசகர்கள் கூட தமிழ் எழுத்தாளனின் நிலை பற்றி நான் அடிக்கடி புலம்புவதைப் பார்த்து வெறுத்து, அலுப்புற்று ஓடி விடுகிறார்கள்.  ஒருவர் வாட்ஸப் வரை வந்தார்.  என்னுடைய ஒரு புலம்பல் கட்டுரையைப் படித்து விட்டு என்னைக் கண்டபடி திட்டி வாட்ஸப் அனுப்பினார்.  அவரை ப்ளாக் செய்து விட்டேன்.  வெகுஜனப் பரப்பிலிருந்து வருபவர்களுக்கு நான் ஏன் புலம்புகிறேன் என்று புரியவில்லை.  இதோ இப்போது விளக்கப் போகிறேன். என்னுடைய எக்ஸைல் … Read more

அந்த்தோனின் ஆர்த்தோ : ஒரு நாடகம்

Antonin Artaud: Blows and Bombs என்று ஒரு புத்தகம் இருக்கிறது. ஸ்டீஃபன் பார்பர் எழுதியது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி ஒரு தலைப்பு தமிழில் எனக்கு மாட்ட மாட்டேன் என்கிறது. நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். புலப்படவில்லை. எதற்கு? ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால்தான் ஆர்த்தோ பற்றி ஒரு நாடகம் எழுதி முடித்தேன். அறுபது பக்க நாடகம். இரவு பகலாக வெறித்தனமாக உட்கார்ந்து எழுதினேன். இரவு பன்னிரண்டுக்குப் படுத்து காலை ஐந்துக்கு எழுந்து எழுதினேன். எழுதுவதற்குக் கொஞ்ச … Read more

குருவே நமஹ…

இன்று குரு பூர்ணிமா. இலங்கையில் இன்று போயா. முழு நிலவு நாளை சிங்களத்தில் போயா என்கிறார்கள். புத்த பூர்ணிமாவின் போது நான் இலங்கையில் இருந்தேன். இரண்டு நண்பர்கள் இன்று எனக்கு வணக்கம் சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள். ஆரோக்கிய புஷ்பராஜ் அவர்களில் ஒருவர். இன்னொருவர் எனக்கே குரு. யோகா குரு சௌந்தர். அவர் எனக்கு ஒரு அற்புதமான வந்தன செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் எழுத்துக்களிலிருந்தும் கற்றுக் கொள்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியது அது. அந்த தர்க்கத்தின்படி … Read more

சித்த மருத்துவம்

அகத்திய முனியால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவம் பன்னெடுங்காலமாக இங்கே மக்களின் பிணி தீர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் புகழ் மங்கி விட்டதை நாம் அறிவோம். இழப்பு நமக்குத்தானே தவிர அந்த மருத்துவ முறைக்கு அல்ல. அதே சமயம் நான் அலோபதி மருத்துவ முறையை எதிர்ப்பவன் அல்ல. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் உயிரைக் காப்பாற்றியது அலோபதி முறைதான். ஆனால் சித்த மருத்துவத்தின் பெருமை என்னவென்றால், ஹார்ட் … Read more