ஜப்பான்: கனவும் மாயமும் (13)

ஜப்பான் பயணம் பற்றி ஏன் தொடர்ச்சியாக எழுதவில்லை என்று கேட்டு சில கடிதங்கள் வந்தன. ஒரே காரணம்தான். எழுத வேண்டிய பல விஷயங்கள் ரொப்பங்கி இரவுகளில் வருகின்றன. ரொப்பங்கி இரவுகளுக்காக பல நாவல்களைப் படித்துக் கொண்டும், பல திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இங்கே இப்போது எழுதினால் நாவலை வெளியிடும்போது ஏற்கனவே படித்ததாக ஆகி விடும். நாவலில் வராத விஷயங்களை வேண்டுமானால் இங்கே எழுதலாம். ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தேன். அதில் ஒருநாள் செந்தில் அவர் இல்லத்துக்கு … Read more

கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 2

நகுலன், புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, கோபி கிருஷ்ணன் மற்றும் ஒரு சிலர் பற்றி கொரோனா காலகட்டத்தில் பேசிய இந்த உரைகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவார்கள். பலராலும் நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்க முடியவில்லை என்று பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உரையாற்றும் நேரத்தைக் காலை ஆறு மணிக்கு வைத்ததன் காரணம், என் அமெரிக்க வாசகர்கள். அவர்களுக்கு அது மாலை நேரமாக இருக்கும் என்பதால் … Read more

கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 1

கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும். ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும். பத்து … Read more

Conversations with Aurangzeb நாவலிலிருந்து ஒரு பகுதி

இன்று ஸ்க்ரால் டாட் இன் இதழில் Conversations with Aurangzeb நாவலிலிருந்து ஒரு பகுதி வெளியாகியுள்ளது. லிங்க்: https://scroll.in/article/1057652/fiction-a-writer-holds-seances-with-shah-jahan-who-is-elbowed-out-by-aurangzeb-to-write-a-novel

இயக்குனர் வஸந்த் & ஔரங்ஸேப்

ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தில் Conversations with Aurangzeb நாவல் இருபதாம் தேதி வரும் என்று சொல்லியிருந்தார்கள். என் நண்பர் ஒரு 150 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அது எப்போது வருமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பொதுவாக எனக்கு மாதம் தேதி வருடம் எதுவுமே தெரியாது. இன்னிக்கு எதுக்கு விடுமுறை என்பேன். காந்தி ஜெயந்தி என்பார்கள். இல்லாவிட்டால் சுதந்திர தினம் என்பார்கள். தீபாவளி மட்டும் தெரிந்து விடும், பட்டாசின் காரணமாக. இந்த நிலையில் ரொம்பப் புதிதாக காலண்டரைப் பார்க்க … Read more