2. தாங்கள் என்றாவது சிறார்களுக்காக ஒரு நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு எழுதினால் அந்த நாவல் எதைப் பற்றியதாக இருக்கும்?
பிரியா, திருநெல்வேலி.
பதில்: ஒருமுறை சிறார்களுக்காக கல்கியில் குட்டிக் கதைகள் எழுதலாம் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. கல்கி ஆசிரியரின் யோசனைக்கு ஏற்ப ஒன்றிரண்டு எழுதியும் அனுப்பினேன். ஆனால் “கடினமாக இருக்கிறது, புரியாது” என்றார்கள். அதோடு விட்டு விட்டேன்.
சிறார்களுக்குச் சொல்ல என்னிடம் ஏராளமான விஷயங்கள் உண்டு. அறிவு என்ற பெயரில் மேற்கத்திய விஷயங்கள் அவர்களின் மூளையில் வைக்கோலைப் போல் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெற்றோரும் கல்வி நிலையங்களுமே காரணம்.
அதனால் நம்முடைய புராணங்களிலிருந்தும் ராமாயணம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் சிறார்கள் அந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை சுவாரசியமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பொழுதுபோக்குக் கதைகளாக அல்ல. அதற்காக நீதி போதனையும் அல்ல. பழைய விஷயங்களை புதிய மொழியில் சுவாரசியமாக எழுத வேண்டும். சித்தர் தத்துவங்களைக் கண்ணதாசன் பாமரருக்கும் புரிகிறாற்போல் சொன்னார் இல்லையா, அது போல.
இதில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளைத் தங்கள் வழியில், தங்கள் நம்பிக்கைகளின்படி வடிவமைக்க (mould) விரும்புகிறார்கள். இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறையாகக் கருதுகிறேன். எல்லோரும் நல்ல எண்ணத்திலேயே இதைச் செய்கிறார்கள். ஆனால் அதுதான் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் ஆகப் பெரிய வன்முறை. ஒரு தந்தையோ தாயோ இடதுசாரி என்றால் குழந்தைக்கு சே குவேரா என்று பெயரிட்டு அக்குழந்தையை ஒரு குட்டி பிளாஸ்டிக் சே குவேராவாக மாற்றுகிறார்கள். டெட்டி பேர் மாதிரி ஒரு பொம்மை சே குவேரா. ஒருவர் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்றால் குழந்தையையும் தன் பாணியிலேயே வளர்க்க விரும்புகிறார்.
குழந்தைக்கு உலகத்தைத் திறந்து காண்பிப்பது மட்டுமே நம்முடைய வேலை. சரியான வயதில் தேர்ந்தெடுப்பதற்கான அறிவையும் ஞானத்தையும் வழங்கலாம். ஆனால் தேர்ந்தெடுப்பது குழந்தையின் முடிவாகவே இருக்க வேண்டும். நான் குழந்தை என்பது 14 வயதிலிருந்து சொல்கிறேன். குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பதையெல்லாம் பெற்றோர் தீர்மானிப்பது இந்த வாழ்வின் மிகப் பெரிய அராஜகம்.
குழந்தைகள் எல்லாம் விடியோ கேம்ஸில் தங்கள் இளமையைத் தொலைத்து விட்ட காலம் இது. அதிலிருந்து தப்பிக்கும் அதிர்ஷ்டசாலிக் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டும்.
நேரம் வாய்த்தால் நிச்சயம் செய்வேன். அதில் நீங்கள் வேறு ஒரு சாருவைப் பார்க்கலாம். துக்ளக் பத்திரிகையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் சொன்னது போல குழந்தைகளுக்குச் சொல்லவும் சேதிகள் பல உண்டு என்னிடம். பார்ப்போம்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai