அ-காலம் வெளிவந்ததும் எத்தனை பிரதி விற்றிருக்கிறது என்று கேட்டேன். 20 என்றார் ராம்ஜி. இப்போது நூறு போயிருக்கலாம். அல்லது அதற்கும் குறைவோ? இப்போதுதான் ஸ்மாஷன் தாரா பிழை திருத்தம் செய்து முடித்தேன். நினைத்திருந்தால் புத்தக விழாவுக்கே கொண்டு வந்திருக்கலாம். 20 பிரதியும் 30 பிரதியும் விற்பதால் ஏற்பட்ட மனச்சோர்வே காரணம். இப்போது, ஸ்மாஷன் தாராவை ஆஃப்செட்டில் போடுங்கள் என்று கேட்கலாமா என்று நினைக்கிறேன். அதற்கு 1000 பிரதிகள் குறைந்த பட்சம் ஆர்டர் போட வேண்டும். என் வாசகர்கள் ஆயிரம் பிரதிகள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் கேட்கலாம் என்று இருக்கிறேன்.