புரவி – கலை இலக்கிய மாத இதழ்

என் நண்பர்கள் கார்த்திகேயன் – அருண் இருவரும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் வாசகசாலை அமைப்பின் சார்பாக மேலும் ஒரு செயல்பாடு புரவி கலை இலக்கிய மாத இதழ். அச்சு இதழ்களெல்லாம் இணையத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் அச்சு இதழாக – அதிலும் மாத இதழாகக் கொண்டு வருவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். கார்த்திகேயனைக் கேட்ட போது தான் பார்த்து வந்த வேலையைக் கூட இதன் பொருட்டு விட்டு விட்டதாகச் சொன்னார். இவர்களைத் தமிழ் இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் உற்சாகப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் புரவி ஆண்டு விழா சிறப்பிதழ் பார்த்தேன். சிறப்பாக உள்ளது. வணிக சினிமாவைக் கொஞ்சம் தவிர்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். வணிக சினிமா தமிழ்க் கலாச்சார சூழலைக் கெடுப்பதில் முதலிடம் வகிக்கும் துறை.

புரவி ஆண்டு விழா சிறப்பிதழ் அந்தக் காலத்து ஆரண்யத்தை நினைவூட்டுகிறது. வாழ்த்துகளும் அன்பும்.

புரவி இதழ் முகவரி:

புரவி,

எண்:1, டாக்டர் அம்பேத்கர் நகர், முதல் தெரு,

வடபழனி, சென்னை 600026

தொலைபேசி: 97904 43979 மற்றும் 99426 33833

puravi.magazine@gmail.com