உடல்களின் மூலம் ஒரு கலகம்

Vagina Monologues என்ற நாடகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  அது ஒரு மட்டமான நாடகம்.  நாடகமே இல்லை.  ஆனால் அதன் பேசுபொருளாலும் தலைப்பாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.  நம் பெருமாள் முருகன் மாதிரி.  ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) அப்படிப்பட்டவர் அல்ல.  உண்மையான பெண்ணியவாதி.  Cunt என்ற பெயரிலும், Suck என்ற பெயரிலும் பத்திரிகைகள் நட்த்தியவர்.  அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் The Madwoman’s Underclothes என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன.  கேத்தி … Read more

உல்லாசம் உல்லாசம் பற்றி…

உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் … Read more

பெட்டியோவும் சிவப்பு நிற இதயக் குறியும்…

பெட்டியோ நாவலின் விற்பனை தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் நான் என்ன சாதனை செய்தாலும் அது இங்கே செய்தி இல்லை என்பதால் நானேதான் வழக்கம்போல் என் தளத்தில் அந்தச் செய்தியை வெளியிட வேண்டியிருக்கிறது. முதலில் கீழே உள்ள விவரங்களைப் பாருங்கள். இதுவரை பெட்டியோ நாவல் பதினோரு பிரதிகள் என்.எஃப்.டி.யில் விற்பனை ஆகியிருக்கின்றன. முதல் பிரதியாக இரண்டாம் எண்ணைக் கொண்ட பிரதி 1260 டாலர், அதாவது, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. வாங்கியவர் … Read more

Conversations with Aurangzeb

Conversations with Aurangzeb நாவல் சென்னை, பெங்களூர், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பிரதான புத்தகக் கடைகளில் முன்னணி விற்பனையில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதுவரை வாங்காதவர்கள் க்ராஸ்வேர்ட் போன்ற கடைகளில் நாவலை வாங்கிக் கொள்ளலாம். சில புகைப்படங்கள் கீழே:

பெட்டியோ: முதல் மதிப்புரை

பெட்டியோ நாவலுக்கான முதல் மதிப்புரை அந்த நாவலை யாருக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அவரிடமிருந்தே வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சித்த மருத்துவரும் என் நண்பருமாகிய பாஸ்கரன் பெட்டியோவுக்கு ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். எந்நேரமும் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை பெரிய நாவலைப் படிக்க எங்கே நேரம் இருக்கும், ஒரு வருடத்தில் படியுங்கள் என்றே சொல்லியிருந்தேன். அவரோ ஓரிரு தினங்களிலேயே படித்து மதிப்புரையும் எழுதி விட்டார். அவந்திகா … Read more

பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் எளிதாக வாங்குவது எப்படி? வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவது எப்படி?

பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதியை வாங்கிய அன்பர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஏதோ எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு முந்நூறு பக்க நூலை வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவதற்கு இதை விட எளிதான வழி உண்டா என்ன? நீங்களும் இந்த வழிமுறையையே பின்பற்றலாம். பல வீடுகளில் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே டிவோர்ஸ் வரை போகிறது என்று ஆண்களும் பெண்களும் புகார் சொல்கிறார்கள். குடிப்பதைக் கூட அனுமதிக்கிறாள், … Read more