Cult writer

என்னைப் பற்றிய விவரக் குறிப்பில் ஆங்கிலத்தில் cult writer in Tamil என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.  கல்ட் என்பதை பொதுவாக தவறான பொருளிலேயே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். காரணம், அந்த வார்த்தை பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தம் கொண்டிருக்கிறது. ஓஷோ ஒரு கல்ட்.  ஜக்கியை என்னால் கல்ட் என்று சொல்ல முடியவில்லை.  அவர் ஒரு யோகா குரு.  அவ்வளவுதான்.  கல்ட் என்றால் அந்த கல்ட் மனிதனின் சிந்தனை மற்றவர் வாழ்வின் அனைத்து அம்சங்களோடும் ஊடாடி ஊடுருவி இருக்க வேண்டும்.  தமிழ் … Read more

பெட்டியோ…

அநேகமாக இன்றோ நாளையோ பெட்டியோ என்.எஃப்.டி.யில் கிடைக்கும். முதலில் பத்து பிரதிகள் வெளிவரும். முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் ரூபாய். இந்தப் பணம் அவ்வளவும் என்னுடைய ஃபெப்ருவரி மாத தென்னமெரிக்கப் பயணத்துக்கு உதவும். ஒன்றரை மாதப் பயணம். ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், கொலம்பியா, சீலே. சாந்த்தியாகோ (சீலே) நகரிலிருந்து மேற்கே கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராப்பா நூயி என்ற தீவுக்கும் செல்கிறோம். ராப்பா நூயியை … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் (13)

ஜப்பான் பயணம் பற்றி ஏன் தொடர்ச்சியாக எழுதவில்லை என்று கேட்டு சில கடிதங்கள் வந்தன. ஒரே காரணம்தான். எழுத வேண்டிய பல விஷயங்கள் ரொப்பங்கி இரவுகளில் வருகின்றன. ரொப்பங்கி இரவுகளுக்காக பல நாவல்களைப் படித்துக் கொண்டும், பல திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இங்கே இப்போது எழுதினால் நாவலை வெளியிடும்போது ஏற்கனவே படித்ததாக ஆகி விடும். நாவலில் வராத விஷயங்களை வேண்டுமானால் இங்கே எழுதலாம். ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தேன். அதில் ஒருநாள் செந்தில் அவர் இல்லத்துக்கு … Read more

இயக்குனர் வஸந்த் & ஔரங்ஸேப்

ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தில் Conversations with Aurangzeb நாவல் இருபதாம் தேதி வரும் என்று சொல்லியிருந்தார்கள். என் நண்பர் ஒரு 150 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அது எப்போது வருமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பொதுவாக எனக்கு மாதம் தேதி வருடம் எதுவுமே தெரியாது. இன்னிக்கு எதுக்கு விடுமுறை என்பேன். காந்தி ஜெயந்தி என்பார்கள். இல்லாவிட்டால் சுதந்திர தினம் என்பார்கள். தீபாவளி மட்டும் தெரிந்து விடும், பட்டாசின் காரணமாக. இந்த நிலையில் ரொம்பப் புதிதாக காலண்டரைப் பார்க்க … Read more

இலங்கையில் யோகா குரு சௌந்தர்

என் யோகா குருவும் நண்பருமான சௌந்தர் இலங்கை சென்றிருக்கிறார். அவரிடம் யோகா பயில விரும்பும் நண்பர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். +94 768664098 சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது என் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கண்ட நண்பர்கள் ஆச்சரியமாகப் பேசினார்கள். அதற்கு ஒரே காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் பயிற்சி செய்து வந்த யோகாதான். வாசகர் வட்டச் சந்திப்புகளில் கூட காலையில் தியானத்தையும், பிராணாயாமத்தையும் நான் கை விட்டதில்லை. சௌந்தரின் யோகாவை நீங்கள் பயன்படுத்திக் … Read more

பெட்டியோ நூறாவது பிரதி: விற்பனையில்…

இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வாட்ஸப்பில் வினித்தின் மெஸேஜ். பெட்டியோ நூறாவது பிரதியை வெளியிட்டு விட்டது பற்றி. நேற்று இரவு வரை கூட இந்த விஷயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாமலேயே இது வெளிவந்த காரணத்தை வினித் தன் குறிப்பில் விளக்கியிருக்கிறார். இன்னொரு விஷயம், வினித்தின் மெஸேஜ் வந்த நேரம் காலை ஐந்தரை. ஆனால் மெஸேஜில் குட்மார்னிங் என்பதற்குப் பதிலாக குட் நைட் என்று இருந்தது. இந்த நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவருவதற்காக பல நண்பர்கள் இரவு பகலாக … Read more