ஆர்த்தோ நாடகத்தைக் காண்பதற்கான ஒரு முன் தயாரிப்பு

Antonin Artaud: The Insurgent ஆர்த்தோ பற்றிய நாடகத்தை சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.  அவர்கள் அனைவருக்குமே நாடகத்தைப் படித்ததும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ ஏற்பட்டது என்றே அவர்களின் எதிர்வினையிலிருந்து தெரிந்து கொண்டேன்.  வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு ஆச்சரிய உணர்வு அவர்கள் பேசும் போது எனக்குத் தெரிந்தது.  சீனியிடம் இதை என்.எஃப்.டி.யில் விடலாமா என்று கேட்டேன்.  வேண்டாம், நாடகங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சொல்லி விட்டார். இம்மாதிரி விஷயங்களில் சீனி பேச்சுக்கு மறு பேச்சு … Read more

ப்ளாக் ஹ்யூமர் என்றால் என்ன? (கட்டுரைதான், கதையாகவும் படிக்கலாம்!)

பெங்களூர் சென்று வந்தேன்.  திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன்.  பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.  பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.  பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை.  இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை.  அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான்.  பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான்.  பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும்.  ஆனால் ஒரு முழுப் … Read more

லாட்டின் இரண்டு புதல்விகள்

டியர் சாரு, உங்களுடைய வாசிப்பு முறை பற்றி நேற்று எழுதியிருந்ததைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால், உங்களுடைய ராஸ லீலாவை நான் மூன்று ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக நான் அதிவேகமாக வாசிக்கக் கூடியவள். நீ என்ன படிக்கிறாயா, ஸ்கேன் பண்ணுகிறாயா என்று என் கணவன் என்னைக் கிண்டல் பண்ணுவான். நான் படிக்கும் வேகத்தை நம்ப முடியாமல் ஒருநாள் அவன் என்னை சோதித்தும் பார்த்தான். இன்னொரு கொடுப்பினை, படித்ததெல்லாம் அப்படி அப்படியே ஞாபகமும் இருக்கும். ஆனால் கடவுள் … Read more

சிங்கள கலாச்சார சூழல் – 2

நேற்று கேகே பற்றி எழுதியிருந்தேன். அவர் 39 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஸர்ப்பயா கதையை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கதையினால்தான் அவரை ஸர்ப்பயா என்றே அழைக்கிறார்கள். நான் படித்த எல்லா ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளிலும் ஆகச் சிறந்ததாக இருந்தது இந்தக் கதை. ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த அளவுக்குத்தான் முடியும். கேகேயின் சிங்களம் நிறைய சிலேடைகளும் வார்த்தை விளையாட்டுகளும் நிறைந்தது என்கிறார்கள். அவர் ஆங்கிலத்தில் எழுதிய Cunt-try என்ற கவிதையைத்தான் என் நாவல் பெட்டியோவில் சேர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலேயே. … Read more

சிங்கள கலாச்சார சூழல் -1

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தைப் போட்டு அடிதடியான போதே முடிவு செய்து விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழில், தமிழ்நாட்டில் நாடகம் போட முடியாது என்று. ஏன் என்று நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் என் நாடகத்தில் நடிப்பவர்களின் உடை இங்கே உள்ள கலாச்சாரவாதிகளால் தாங்க முடியாததாக இருக்கும், சமயங்களில் பாத்திரங்கள் நிர்வாணமாகக் கூட வருவார்கள் என்பேன். நல்ல காலம், என் கலை எழுத்து என்பதாலும், தமிழர்கள் வாசிப்பை வெறுப்பவர்கள் என்பதாலும் நான் … Read more