சொற்கடிகை : 20

சொற்கடிகை எனக்குப் பெருத்த ஏமாற்றம் என்றார் டார்ச்சர் கோவிந்தன்.  ஆரம்பத்தில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது.  பழைய ஞாபகங்களை நினைவு கூர்தல் (reminiscence) என்று தொடங்கி இப்போது அன்றாட நாட்குறிப்பு மாதிரி ஆகி விட்டது என்று சலித்துக் கொண்டார். நான் சொன்னேன், நான் தரையிலிருந்து பார்க்கவில்லை.  தரையில் இருப்பவனுக்குத்தான் பின்னால் முன்னால் எல்லாம். நான் கலைஞன்.  மேலே பறப்பவன். எனக்கு முன்னால் பின்னால் எதுவுமே கிடையாது.  மேலே இருந்து நோக்கும்போது எல்லாமே சமம்தான்.  நேற்றும் இன்றும் ஒன்றுதான்.  மீண்டும் … Read more

ஸ்மாஷன் தாரா மீண்டும்…

நண்பர் ஒருவர் போன் செய்து ஸ்மாஷன் தாரா ஏன் இத்தனை தாமதம், புத்தக விழாவிலேயே வந்திருக்கலாமே என்றார். இப்போது வராததும் நல்லதுதான். அங்கே மிஸ் யூ சுனாமி அடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த மாதம் வருவதே உசிதம். சுனாமி என்பது சின்ன வார்த்தை. ஹமீதைப் பார்க்க உயிர்மை போயிருந்தேன். ஒரு குடும்பம் வந்தது. 30 வயது இளைஞர். அம்மா. மனைவி. குழந்தை. மிஸ் யூவை வாங்கி ஹமீதிடம் கையெழுத்து வாங்கினார். போட்டோ எடுத்துக் கொண்டார். எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் … Read more

ஸ்மாஷன் தாராவின் விற்பனை குறித்து…

டியர் சாரு,அன்பு வணக்கங்கள். உங்களின் இன்றைய பதிவை படித்தேன். அதில் 1000 பிரதிகள் புத்தகம் வாங்க வாசகர்களிடம் கேட்கிறேன் என்றீர்கள். எனக்கு அச்செய்தி ஆச்சிரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது. ஆச்சரியம் என்ன வென்றால் உங்கள் போல முதிர்ந்த எழுத்தாளர் இப்படி சொல்வது.நான் யோசிக்கிறேன் இதனால் தான் பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் பதிப்பகம் வைத்துள்ளார்கள் என்று. வெளியல் இருந்து பார்க்கும் என்னைப் போன்ற வாசர்களுக்கு, எடுத்துக்காட்டாக எஸ்.ரா, வம்சி புக்ஸ், போன்ற பதிப்பகங்களில் போடப்படும் புத்தகத்தின் விலை அதிகமாக உள்ளதன் … Read more

ஸ்மாஷன் தாரா

அ-காலம் வெளிவந்ததும் எத்தனை பிரதி விற்றிருக்கிறது என்று கேட்டேன். 20 என்றார் ராம்ஜி. இப்போது நூறு போயிருக்கலாம். அல்லது அதற்கும் குறைவோ? இப்போதுதான் ஸ்மாஷன் தாரா பிழை திருத்தம் செய்து முடித்தேன். நினைத்திருந்தால் புத்தக விழாவுக்கே கொண்டு வந்திருக்கலாம். 20 பிரதியும் 30 பிரதியும் விற்பதால் ஏற்பட்ட மனச்சோர்வே காரணம். இப்போது, ஸ்மாஷன் தாராவை ஆஃப்செட்டில் போடுங்கள் என்று கேட்கலாமா என்று நினைக்கிறேன். அதற்கு 1000 பிரதிகள் குறைந்த பட்சம் ஆர்டர் போட வேண்டும். என் வாசகர்கள் … Read more

சொற்கடிகை – 19

இயக்குனர் வஸந்த்தை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவரைப் போலவே நானும் பாபாவின் பக்தன். அவர் வீடும் என் வீடும் அருகருகே இருந்ததால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இன்று ஸீரோ டிகிரி அரங்கில் சந்தித்தோம். அவருடைய விசேஷம் என்னவென்றால், அவரிடம் சினிமாவின் வெளிச்சமே தெரியாது. அப்படிப் பழகும் ஒரு சிலர் ஏ.ஆர். ரஹ்மான், பாரதிராஜா, லெனின். என் பள்ளிப் பருவத் தோழனைப் போல் பழகியவர் பாலு மகேந்திரா. வஸந்த்தும் பாலுவைப் போன்றவர்தான். இன்று அவர் என்னிடம் போய் … Read more