முதல்வருக்கு இரு கடிதங்கள்
பின்வரும் இரண்டு கடிதங்களும் முதல்வர் திரு. ஸ்டாலினுக்கு எழுதி குமுதத்தில் வெளிவந்தவை. நீண்ட கடிதம் என்பதால் இரண்டாகப் பிரிக்க நேர்ந்தது. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தங்களை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். சற்றே தாமதம் ஆனாலும் அது நடந்து விட்டது. வாழ்த்துகள். அதே சமயம் ஒரு சவாலான சூழ்நிலையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். அந்த சவாலை எதிர்கொள்ள அதிகாரிகள் முழுமூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். … Read more