செப்டம்பர் 17, ஆரோவில் சந்திப்பு

வணக்கம் சாரு, பதினேழாம் தேதி உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு கலையில் நிபுணத்துவம் பெற்ற மனிதரை நேரில் சந்தித்து, உரையாடும் வாய்ப்பு கிட்டும் பொழுது, அதை எப்படிப் பயன் படுத்தவேண்டும் என்பதை இந்தச் சந்திப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் எந்தக் கேள்வியையும் தயார் செய்துகொண்டு வரவில்லை. நீங்கள் எழுதிய புத்தகங்களில், ஒருவருக்கு எழும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், வலைதளத்திலும் உங்கள் வாழ்க்கையை திறந்துகாட்டி விடுகிறீர்கள். அதற்கு மேல் என்ன வேண்டும். இந்த … Read more

என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் குடும்பநல நீதிமன்றம்.  நீதிபதியின் உள் அறையில் அவர் முன்னே ஒரு குற்றவாளியைப் போல் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நீதிபதியும் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே பார்க்கிறார். உம்முடைய பெயர் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்.  (ஆங்கிலத்தில் நீ, நீர், நீங்கள் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர் கேட்ட விதம் நீ என்பதற்கும் நீங்களுக்கும் நடுவில்தான் இருந்தது என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.)  அறிவழகன் சார் என்று பவ்யமாகச் சொன்னேன். அட்ரஸ் என்று … Read more

மிஷ்கினுக்கு வாழ்த்து

முந்தாநாள் மிஷ்கினிடமிருந்து ஃபோன். செப்டம்பர் இருபது மிஷ்கினுக்குப் பிறந்த நாள் என்று எனக்குத் தெரியும். வாழ்த்து சொன்னேன். பத்தொன்பது இரவு மஹாபலிபுரத்தில் கொண்டாட்டம், வந்து விடுங்கள் என்று அழைத்தார். நானும் நேற்று இரவு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேற்று மாலைதான் பாண்டிச்சேரியிலிருந்து திரும்பியிருந்ததால் உடனடியாகக் கிளம்ப முடியாத குடும்பச் சூழல். அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன், இறை சக்தி அனுமதித்தால். இன்று பிறந்த நாள் காணும் மிஷ்கினுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நான்தான் ஔரங்ஸேப்…

முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம … Read more

ஏன் வாழ்த்து சொல்லவில்லை? ஒரு விளக்கம்

எங்கள் பிரியத்துக்குரிய சாருவுக்கு, விஷ்ணுபுரம் விருதுக்காக என் பணிவான, மனப்பூர்வமான வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.  மேலும், காலம் தாழ்த்தி வாழ்த்துவதற்காக மிகவும் பணிவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  உண்மையை சொல்லப் போனால், தங்களை வாழ்த்துவதற்கு நான் மிகவும் தயங்கினேன்.  ஏன் என்பதற்கான காரணங்களை இங்கே தொகுத்துப் பார்க்கிறேன்: 1.எங்களைப் பொறுத்தவரை நீங்கள் larger than life நாயகன்.  என்றைக்குமே அழிவு இல்லாத ராக் ஸ்டார்.  நானோ ஒரு பொடியன்.  நான் எப்படி ஒரு லெஜண்டாக வாழும் … Read more

எழுத்தும் வாழ்வும்…

சாருநான் தங்களுக்கு முன்னமே வாழ்த்து சொல்லியிருப்பினும் இன்றுசாருதாசன் மற்றும் அராத்து, வளன், காயத்ரி, நிர்மல், முருகேச பாண்டியன் கட்டுரைகளைப் படிக்கும் போது நான் வெறுமனே சம்பிரதாயமான வாழ்த்தாகக் கூறிவிட்டதுபோல ஒரு உறுத்தல்.இன்று நாங்கள் கொண்டாடிவரும் இத்தருணமானது தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கிறேன். இது ஓர் ஆரோக்கியமான, நிறைவான, முதிர்ச்சி பெற்ற சூழலின் துவக்கப்புள்ளியாகத் தெரிகிறது. அது மட்டுல்லாது பலரது கடிதங்கள் ஏற்படுத்திய முக்கிய விளைவுஎன்னவெனில் மீண்டும் தங்களது நூல்களை மறுவாசிப்பு செய்யவும் சரியான … Read more