அடியேனுக்கு விஷ்ணுபுரம் விருது…

2022ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அடியேனுக்கு வழங்கப்படுகிறது.  இது குறித்த அறிவிப்பு கீழே உள்ளது.  இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஜெயமோகனுக்கும் மற்ற விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  வழக்கம் போல் இது குறித்த வசைகளும் ஆரம்பித்து விட்டன.  வசைகளை ஜெயமோகனும் நானும் பகிர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  தேகம் நாவலில் நான் எழுதியதையெல்லாம் மேற்கோள் காண்பித்துத் திட்டுகிறார்கள்.  அந்த அளவுக்கு உன்னிப்பாகப் படித்திருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இனிமேல் இது போன்ற வசைகளுக்கும் … Read more

இலக்கியத்தில் ஓர் இடம்!

“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா? … Read more

தொல்காப்பியர் பூங்கா என்ற வனத்தில்…

இன்று காலை என் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வனத்தில் (தொல்காப்பியர் பூங்கா என்று பெயர்) நடைப் பயிற்சி சென்ற போது ராகவன் எடுத்த நிழல்படம்

த அவ்ட்ஸைடர்… (1)

சில தினங்களுக்கு முன்னால் த அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக பார்க் ஷெரட்டன் வரச் சொன்னார் சீனி.  பார்க் ஷெரட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பார்தான் ஒரு காலத்தில் என் வீடாக இருந்தது.  எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு என்றெல்லாம் ராஸ லீலாவை வைத்துக் கணக்குப் போட்டு ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டும்.  ஆனால் இருபது ஆண்டு காலம் இருக்கும்.  எப்போது அங்கே போவதை நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறது.  ஞாபகம் என்ன ஞாபகம்?  அந்த சம்பவத்தை இந்தியர் யாரும் … Read more

நோபல் பரிசுக்குப் பரிந்துரை…

My beloved Charu, பா. வெங்கடேசன் பற்றிய உங்கள் குறிப்பும் ஆசையின் கட்டுரையும் படித்தேன்.  உங்கள் கருத்தை மதிக்கிறேன்.  பா. வெங்கடேசனை உடனடியாக வாங்கிப் படிக்கிறேன்.  நீங்கள் சிபாரிசு செய்யும் எழுத்தாளர்கள் பலரையும் படித்து வருகிறேன்.  எதுவுமே ஏமாற்றியதில்லை.  ஆசையின் அபிப்பிராயம் பற்றி.  தாண்டவராயன் கதை நோபல் பரிசுக்கு உரியது என்று சொல்லியிருக்கிறார்.  அப்படியே ஆக வேண்டும்.  ஆனால் எனக்கு ஒரு கேள்வி.  ஆசையோ நீங்கள் வியந்தோதும் பா. வெங்கடேசனோ நீங்கள் எழுதிய ராஸ லீலாவைப் படித்திருப்பார்களா?  … Read more

சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா?

செக்ஸ் இல்லாமல் ஒரு ஆயிரம் பக்க நாவலை எழுதியிருக்கிறேன் என்று நேற்று எழுதியதும் சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா என்று கேட்டிருக்கிறார் நண்பர் சமஸ்.  விவாதங்கள் என்றால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.  பொதுவாக இலக்கிய சமாச்சாரங்கள் எதுவுமே பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை.  அதை முதல் முதலில் உடைத்தவர் சமஸ்தான்.  அவர்தான் தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார்.  அதுவரை அந்த மரியாதை எல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.  ஒரு எழுத்தாளர் இன்னமும் … Read more