நான் ஒரு ஊழியக்காரன்

சமீபத்தில் ஒரு வாசகர் டியர் ஜிந்தகி என்ற படத்தின் கடைசிக் காட்சியின் காணொலியை அனுப்பி, அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இன்றைய சமூக எதார்த்தத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், படம் முழுக்கவும் பார்க்காவிட்டாலும் இந்தக் காட்சியை மட்டுமாவது பார்க்குமாறும் எழுதியிருந்தார்.  குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த போது இரண்டு மனநோயாளிகள் பேசிக் கொள்வது போல் இருந்ததால், படத்தையும் முழுசாகப் பார்த்துத் தொலைத்து விடுவோம் என்று பார்த்தேன்.  வாசக நண்பர் சொன்னது உண்மைதான்.  மற்ற ஹிந்தி ஃபார்முலா கதைகளிலிருந்து … Read more

பெட்டியோ வாசிப்பு அனுபவம்: வளன் அரசு

சாருவின் பெட்டியோ நாவலை மிகத் தாமதமாக வாசித்தேன். இப்படி ஒரு நாவல் வெளிவந்த பிறகு எப்படி பேசுபொருள் ஆகாமல் போனது என்று வியப்பாக இருந்தது. ஆனால் அப்படி பேசுபொருள் ஆகியிருந்தால் தமிழர்கள் வாழ்வியலில் அடுத்தகட்ட நகர்வு வந்துவிட்டார்கள் என்றாகிவிடும். ஆகவே பெட்டியோ இப்படி தண்ணீரில் கிடக்கும் கல்லாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பெட்டியோ வாசித்தபோது சாருவின் நாவல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. ஸீரோ டிகிரி படித்த போது ஏற்பட்ட பரவசம் அப்படியே இந்த நாவல் வாசிக்கும் … Read more

Scent of a Woman… (மேலும் சில விளக்கங்கள்) – ஸ்ரீ

நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்கள். கர்னலுக்கும் எனக்குமான இணைத்தன்மைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் இன்னொன்று. சார்லியை கர்னலின் உதவிக்கு அனுப்பும்போது கர்னலின் மகள் சார்லியிடம் ஒரே ஒரு விஷயத்தை வலியுறுத்துவாள். ”அவரை சார் என்று அழைக்காதே, கெட்ட கோபம் வந்து விடும்.” ஆனாலும் சார்லி ஒரு மாணவன் என்பதால் எடுத்த எடுப்பிலேயே கர்னலை சார் என்று அழைத்து கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குவான். அவனுக்கு அதை மாற்றிக் கொள்ள மேலும் சில வசவுகளை வாங்க … Read more

ஶ்ரீயின் கேள்வியும் என் பதிலும்…

படத்தைப் பற்றிய என் குறிப்பு வெளிவந்த பத்தே நிமிடங்களில் ஶ்ரீயின் ஒரு கேள்வி வந்து விழுந்தது. அதில் எக்ஸைல் பற்றிய ஒரு நிராகரிப்பும் இருந்தது. ஶ்ரீ அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுதான் நியாயமும் கூட. அதனால் அவளை மன்னித்து விட்டேன். மற்றபடி எக்ஸைல் பிரபஞ்ச அன்பு குறித்த ஒரு சாசனம். என் எழுத்துக்களிலேயே என்னைப் பற்றி அதிகம் வெளிப்படுத்திக்கொண்டது அந்த நாவலில்தான். ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வியல் ஆவணம் அது. இனி ஶ்ரீ: Put your exile … Read more

Scent of a woman

இந்தப் படத்தை எப்படி இத்தனைக் காலமாகத் தவற விட்டேன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் வரும் த்தாங்கோ நடனக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். அல் பச்சீனோவின் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தும் படம். இந்தப் படத்தில் நடிப்புக்காக அவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். நேற்று நாள் முழுதும் எழுதி விட்டு ஸில்வியா ப்ளாத்தின் தெ பெல் ஜார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு எட்டரை மணி வாக்கில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று தோன்றியபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. … Read more