நானும் வாசகர் வட்டமும்…

என்னுடைய எழுத்தின் மீது பிரியம் கொண்ட சில நண்பர்கள் ஏற்படுத்திய அமைப்பே வாசகர் வட்டம்.  இதற்கு முன்னாலும் ஒரு வாசகர் வட்டம் இருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நிறுவிய வாசகர் வட்டம். க்ரியா பதிப்பகத்துக்கும் முன்னால் அதற்கு ஒரு முன்னோடியாக இருந்த வாசகர் வட்டம் அது.  நல்ல புத்தகங்களைப் பதிப்பிப்பது அந்த வாசகர் வட்டத்தின் நோக்கமாக நடைமுறையாக இருந்தது.   என் வாசகர் வட்டத்தைப் பற்றி எனக்கு நெருக்கமான பலரே அவதூறாகப் பேசும் போது வேதனையாக உள்ளது. என் … Read more

குடும்ப நலச் சட்டங்கள் (2)

சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட படித்ததில் பிடித்தது என்ற கட்டுரையை இதன் முதல் பகுதியாகக் கொள்ளவும்.  ஒரு வாசகியிடமிருந்து இதற்கு மறுப்பாக ஒரு கடிதம் வந்துள்ளது.  அதற்கும் பதில் எழுத வேண்டும்.  நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.  பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை; சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்கள் எத்தனையோ வேதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.  என் வாசகி ஒருவரை அண்ணா சாலையில் எதேச்சையாகச் சந்தித்த போது எப்படி இருக்கிறீர்கள் என்று சாதாரணமாக விசாரித்தேன்.  அதற்கு அவர் முந்திலாம் அடிச்சிக்கிட்டிருந்தான்; … Read more

சென்னை

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றான் சங்கக் கவிஞன்.  ஆனால் அதெல்லாம் நம்முடைய நினைவுச் சின்னங்களில் பொறித்துக் கொள்வதற்காக மட்டுமே நம்மிடம் இருக்கும் அலங்கார வார்த்தைகள்.  தங்களின் பிறந்த ஊர், வளர்ந்த ஊர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றுதலைப் பார்க்கும் போது எனக்கு அச்சமாக இருக்கிறது.  சில எழுத்தாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அந்த ஊரைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்.  தண்ணீர் வசதியே இல்லாமல் வெறும் கட்டாந்தரையும் … Read more