ஜெயமோகனின் அறம்

சாரு, எம் வி வெங்கட்ராம் குறித்த கட்டுரை அருமை .ஒரு தகவல் விடுபட்டிருந்தது .எம் வி வெங்கட்ராம் தான் ஜெயமோகனின் அறம் சிறுகதையின் நாயகன் என எண்ணுகிறேன் .நீங்கள் எதையும் இருட்டடிப்பு செய்பவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்த விஷயம் உங்கள் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது ஒரு விதமான உயர் உன்மத்த நிலையில் அந்த கட்டுரையை எழுதிய போது விடு பட்டிருக்கலாம் . எனவே தான் இந்த மின்னஞ்சல் .இம்சை செய்யவில்லை என்று எண்ணுகிறேன். நன்றி. அனிஷ் … Read more

சுந்தர் பிச்சை

அன்புக்குரிய நண்பர் பி.ஏ. கிருஷ்ணனின் முகநூலில் பின் வரும் குறிப்பைக் கண்டேன்.  அவருடைய கருத்தில் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்.  பல ஆண்டுகளாக இதைத்தான் நான் சொல்லி வருகிறேன். I had always had the suspicion that Tamil Nadu had a sizable share of persons who suffered from serious brain damage but were allowed to roam about freely in the cyberspace, especially the Facebook. … Read more

நான் ரங்கராஜ் பாண்டேயின் ரசிகன் (2)

ராஜ் சிவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவருடைய முகநூலில் கண்டுள்ள பின்வரும் விவாதம் உங்கள் பார்வைக்கு. ராஜ் சிவா: நேற்று ஆபாச இணையத்தளங்களத் தடைசெய்வதுபற்றித் தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் சாரு நிவேதிதா கலந்து கொண்டார். அவர் தனது கருத்துகளைச் சொல்லும்போது, ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பார்க்கவே முடியாது. அதற்கான தொழில்நுட்பங்கள் அங்கு நடைமுறையில் உள்ளன. அதுபோல ஒரு தொழில்நுட்பத்தை இங்கும் கொண்டுவரலாம் என்றார். சாரு சொன்னது நூறுசதவீதம் … Read more

லிங்காத்தாள் குட்டை சந்திப்பு (2)

இது பற்றி நான் முன்பு எழுதியிருந்ததில் பண விஷயம் பற்றியும் குறிப்பிட்டிருந்ததால் அதுவே பிரதான விஷயமாக மாறி விட்டது.  இப்படி மாறும் என்று எதிர்பார்த்தே அதை எழுதலாமா விடலாமா என்று நீண்ட நேரம் யோசித்தேன்.  பிரதான விஷயம் அதுவல்ல.  நான் என்றுமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல என்பதை நண்பர்கள் அறிவர்.  எல்லோரும் அறிய வேண்டும் என நான் எதிர்பார்த்தது என்னவெனில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் என்னிடம் வந்து விவாதித்து விட முடியும் என்ற அராஜக … Read more

கம்பராமாயண இசைப் பேருரை

மைலாப்பூர் லஸ் அருகே உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் கம்பராமாயண இசைப்  பேருரை  மதுரை TN சேஷகோபாலன்  அவர்களால் வரும் ஆகஸ்ட் 14தேதி முதல் 22தேதி வரை, நிகழ்த்தப்பட உள்ளது.   ஆர்.கே. கன்வென்ஷன் செண்டர் லஸ்ஸில் விவேக் அண்ட் கோவுக்கு எதிரே உள்ள மாடியில் உள்ளது.  15-ஆம் தேதி தவிர மற்ற தினங்களில் நான் செல்ல இருக்கிறேன். நண்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முதல் நாள் (14 அகஸ்டு ) திரு வைத்யநாதன் (ஆசிரியர் தினமணி) தலைமையில், திரு இலங்கை ஜெயராஜ், சிறப்பு விருந்தினராகலந்து கொள்ள  மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி  தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சிகள் யாவும் காணொளி முலம் காண . https://www.youtube.com/channel/UC8qohExQUiye1UWkH5fyC2A இசைப் பேருரை – நிகழ்ச்சி நிரல் 14/8/2015-நாயகன் தோற்றம் 15/8/2015-வேள்வி காத்தோன் 16/8/2015-திருமகள் நாயகன் 17/8/2015–அயோத்தி வள்ளல் 18/8/2015-பாதுகை ஆட்சி 19/8/2015-சபரி யோக முக்தி 20/8/2015-வாலி மோக்ஷம் 21/8/2015-விபீஷண ஶரணாகதி 22/8/2015-சக்ரவர்த்தித் திருமகன் … Read more