வாசகர் வட்டத்திலிருந்து இன்னொரு இளம் எழுத்தாளர்…

கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, கார்ல் மார்க்ஸ்… இன்னும் புத்தகமாக வர வேண்டியவர்கள் செல்வகுமார் கணேஷ், நிர்மல் (இவரிடம் எக்கச்சக்கமான சரக்கு இருக்கிறது), ஜெகா, பூர்ணசந்திரன்… இப்போது என் மனம் கவர்ந்த, தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த பிரபு காளிதாஸ்… (மை டியர் பிரபு, வெளியீட்டு விழாவுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள்.  ப்ளீஸ்.  வேண்டுமானால் இரண்டு பேரும் ராயர் கஃபேவில் தனியாக ஒரு வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம்.  இம்சை இல்லை…)

முகநூலில் செல்வகுமார்…

செறிவான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள்கூட தங்கள் மூளையை எங்காவது அடமானம் வைக்க முடியும் என்றால், காலாகாலத்துக்கும் அவர்கள் இலக்கியத்தில் சேர்த்தவை அனைத்தும் குப்பை என்று ஆகிவிடாதா? உயிர் பிரிந்தால், அடுத்த நிமிடத்திலிருந்து உடல் அழுகத் தொடங்கிவிடுவது போல, சார்பற்ற நிலை அழிந்தால் மனம் இப்படி அழுகத் தொடங்கிவிடுவது இயல்புதான். அள்ளி புதைத்துவிட்டு போக முடியுமே தவிர அதன்பின் அந்த மனம் உருவாக்கும் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்கமுடியுமா? எழுத்து முதலில் எழுதியவன் மனதை செம்மைபடுத்த வேண்டும். அப்போதுதான் … Read more