விழா பதிவுகள் – 30

உமா ஷக்தி முகநூலில், 28.2.16 அன்று எழுதிய பதிவு:   புகைப்படம்: பிரபு காளிதாஸ் சாரு எழுதிய அத்தனை புத்தகங்களையும் நான் படித்ததில்லை. ஆனால் ராஸ லீலா உட்பட முக்கியமான புத்தகங்களை படித்துள்ளேன். சாருவின் எழுத்தில் என்னை எப்போதும் கவர்வது தங்குதடையில்லாத எவ்வித மனத்தடையும் (inhibitions) இல்லாத ஒரு மொழிநடை. பிரவாகமாக, எளிமையாக, மிகவும் நேரடியாக நம்முடன் உரையாடும் மொழி அவருடையது. அவருடைய புதிய எக்ஸைல் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு முழுவதும் … Read more

விழா பதிவுகள் – 29

தினமணியில் விழா பற்றிய செய்தி: http://bit.ly/1OV2uFq *** சில புகைப்படங்கள்: இடமிருந்து இரண்டாவதாக: DCP திரு.ராமகிருஷணன் தர்மசேனனுடன் மக்களில் ஒரு பகுதி. மேலே உள்ள படங்கள்: பிரபு காளிதாஸ்   ஜெகா, மனாசே  

விழா பதிவுகள் – 28

அழகிய சிங்கர் முகநூலில்: சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன். சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார். எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று. அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார். எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று. கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், எஸ்.ரா., அம்ஷன் குமார் அசோமித்திரன், அழகிய சிங்கர், ஓவியர் ஸ்ரீனிவாசன் உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் … Read more

விழா பதிவுகள் – 27

எம்.எம்.அப்துல்லா, வாசகர் வட்டத்தில்: பா.ராவின் அதி தீவிர ரசிகன் என்ற பெயர் எனக்கு இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவறவிட்டதில்லை. அநேகமாக சாருவின் நிகழ்ச்சிக்கு கரை வேட்டியோடு வரும் ஒரே கீழ்மட்ட அரசியல்வாதி நானாக மட்டும்தான் இருப்பேன். சென்ற ஆண்டு சாருவை காமராஜர் அரங்கில் கோட்டு சூட்டோடு பார்த்த போது அடுத்த முறை வேட்டி இல்லாமல் பேண்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே வந்தேன். ஆனால் கலர் சட்டை இல்லை. மக்கள் … Read more

விழா பதிவுகள் – 26

நிர்மல், முகநூலில்: புத்தக வெளியிட்டு விழாவில் நான் கவனித்த இன்னோரு விஷயம் கட்டித்தழுவல். மிக எளிதாகவும் இயல்பாகவும் கட்டித்தழுவிக் கொண்டோம் . ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது கட்டித்தழுவது எளிதான காரியமல்ல – மற்றவரின் உடல் மொழி புரிந்து அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டியது முக்கியம். ஆனால் எல்லோரும் மிக எளிதாக கட்டித் தழுவியது ஒரு யூனிக்கான செயல் என்றே தோனுகிறது. நிர்மல் ஓவியர் ஸ்ரீனிவாசன். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்

விழா பதிவுகள் – 25

பூர்ண சந்திரன் முகநூலில்: கேசரி வடை போண்டா என இனிப்பாகவும் காரசாரமாகவும் ஆரம்பித்தது விழா. அரங்கம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் கொடுத்தது. இறையன்பு அவர்கள் அடுத்தடுத்த விழாக்கள் இருப்பதாக சற்று முன்னதாக வந்து வாழ்த்திவிட்டு போனார். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ் சமஸ்,திருப்பூர் கிருஷ்ணன்,லெனின் சிறப்பாக பேசினர். மனுஷ், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக சிறந்த இலக்கிய புத்தகங்களை சேர்க்கவேண்டும் என்று குறிபிட்டதற்கு, சாரு இப்போதைக்கு நடக்காது, நீங்க கல்வி மந்திரி ஆகி இதச் செய்ய்யனும் என்றார். மேலும் சாருவின் … Read more