விழா பதிவுகள் – 23

புகைப்படத்தில் டாக்டர் ஸ்ரீராம், நிர்மல், ஜெகா.  நின்று கொண்டிருப்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த கருணாநிதி அர்ஜித். இரண்டாவது புகைப்படத்தில் ஆத்மார்த்தி, கணேச குமாரன்.  முதல் வரிசையில் உமா ஷக்தி. உமா சக்தி முகநூலில்: விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எப்போதும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அரங்கு நிறைந்த கூட்டம் இருக்கும். இன்றும் அப்படியே. கடல் கடந்தும் அவரைக் கொண்டாட நண்பர்கள் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி.சாருவைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவும் புத்தக வெளியீடு முடிந்தவுடன் கிளம்பவும் முடிவு செய்திருந்தேன். … Read more

விழா பதிவுகள் – 22

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மனாசே விழா பற்றி எழுதியிருந்தது இது.  மனாசேவுக்கு என் எழுத்து வெறும் எழுத்து மட்டும் அல்ல.  அவர் என் எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அவர் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும்.  அவர் வாழ்வின் போக்கை மாற்றியது என் எழுத்து என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.  மனாசேவுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லை.  நான் எதையும் திருத்தவில்லை.  அவர் எழுதியபடியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன்.  ஆனால் விழா பற்றிய பதிவுகளிலேயே ஆக முக்கியமானதாக இதைக் கருதுகிறேன். … Read more

விழா பதிவுகள் – 21

வேறு தேதியில் விழா நடத்தப்பட்டிருந்தால் திரையுலக, தொலைக்காட்சி நண்பர்கள் பலரும் வந்திருப்பார்கள்.  முக்கியமாக, பார்த்திபன், ராதா மோகன், தயாரிப்பாளர் ராம்ஜி, விஜய் டிவி ஆண்டனி.  சிங்கப்பூரில் வசிக்கும் அகிலன் முதலில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நம்முடைய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு பிறகு இளையராஜா விழாவுக்குச் சென்றார்.  போகும் போது என்னை மேடையிலிருந்து அழைத்து சொல்லி விட்டுச் சென்றார்.  அவருக்கு என் நன்றி.  மேலே உள்ள புகைப்படத்தில்: ஓவியர் சீனிவாசன், எஸ். வைத்தீஸ்வரன், … Read more

விழா பதிவுகள் – 20

ஃபெப்ருவரி 27 அன்று இளையராஜா விழா மட்டும் அல்லாமல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியும் இருந்திருக்கிறது.  அதையும் விட்டு விட்டு நம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.  என்ன, தேர்த் திருவிழா ஊர்த் திருவிழா கூட்டமாமே என்று கேட்டார் ப்ரஸன்னா ராமசாமி.  அரங்கில் மேடை சம்பந்தமான வேலைகளைச் செய்யும் போது ஜெகா கீழே விழுந்து கை மணிக்கட்டில் வீக்கம், கடும் வலி.  என்னிடம் சொல்லவில்லை.  அந்த வலியுடனேயே விழா … Read more

கோவை புத்தக வெளியீட்டு விழாவில் இந்து மேனன் உரை

12 ஆண்டுகளுக்கு முன் லெஸ்பியன் பசு என்ற சிறுகதையின் மூலம் பிரபலமான மலையாள எழுத்தாளரும் என் நீண்ட கால தோழியுமான இந்து மேனனின் உரை:

கோவை புத்தக வெளியீட்டு விழா

கோவையில் உயிர்மை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  விழாவில் எக்கச்சக்க கூட்டம்.  பல ஆண்டுகள் கழித்து மலையாள எழுத்தாளர் இந்து மேனனை சந்தித்தேன்.  கவிஞர் புவியரசு, அக்னிபுத்திரன் ஆகிய நண்பர்களைச் சந்தித்தும் ஆண்டுகள் ஆகி விட்டன.  விழாவில் அவர்களைச் சந்தித்ததும் சந்தோஷமாக இருந்தது. இந்து மேனன்   அக்னிபுத்திரன், கவிஞர் புவியரசு விழா முடிந்த மறுநாள் காலை ஊட்டிக்கு அருகில் உள்ள மசினக் குடி என்ற காட்டுப் பகுதிக்குச் … Read more