பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 4)

இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சிவிட்டார்; எப்படியென்றால், ‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டுவிட்டது. மேலும் படிக்க: தினமணி இணையதளம்  

காவிரி – கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது: காவிரிப் பிரச்சினையை ஒட்டி கர்நாடகாவில் நடக்கும் வன்முறைகளை ஆராய்ந்தால், ‘தண்ணீர்’ என்பதைத் தாண்டி நாம் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது; எவ்வாறு ஒரு கலவரம் எளிதாக உருவாக்கப்படுகிறது என்பதும் மேலும் முழுவீச்சில் அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதும். இவை தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் என்று யாரேனும் சொல்ல முயல்வார்களானால் அவர்கள் நெஞ்சறிய பொய் சொல்கிறார்கள் என்று பொருள். உதிரிகளைக் கட்டமைத்து களமிறக்குவதில் கர்நாடகம் வெற்றியடைந்திருக்கிறது. இந்த வெற்றி … Read more

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூல் வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதாவின் உரை தேதி: ஜூன் 19, 2016 நன்றி: திரு. ஜெய்சக்திவேல், துணைப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக்கழகம். நன்றி: சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையின் ‘தமிழ் யாழ்’ இணைய வானொலி நன்றி:  shruti.tv

சிந்தனையாளர்கள் தேவை

சிந்தனையாளர் என்பவர் யார்? ஒரு கொந்தளிப்பான சூழல். ஒரு சாரார் இன்னொரு சாராரை அடித்து உதைக்கிறார்கள்.  உயிரோடு கொளுத்துகிறார்கள்.  இன்னொரு சாரார் இன்னொரு பக்கம் எதிரியைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது வெறுமனே அடியை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.  பார்ப்பவர்களின் ரத்த வெறியைத் தூண்டி விடுகின்றன.  எல்லோரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  வன்முறையின் மீது தாகம் ஏற்பட்டு விடுகிறது.  அடி உதை அடி உதை.  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நல்லவர்களாகத் தெரிந்தவர்கள்தான்.  … Read more