நிலவு தேயாத தேசம்

“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.” நிலவு தேயாத தேசம் நூலிலிருந்து… துருக்கி பயணக் கட்டுரையான நிலவு தேயாத தேசம் இன்று மாலை ஐந்து மணியிலிருந்து சென்னை புத்தக விழாவில் கிழக்கு பதிப்பக அரங்கத்தில் கிடைக்கும்.  இது சமீபத்தில்வெளிவந்துள்ள புதிய நூல்.  

ரெண்டு பேர்

எனக்கு இரண்டு ஸ்வீகார புத்திரர்கள்.  ரெண்டு பேர் மீதுமே எனக்குப் படு காட்டமான பொறாமை எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் – நம்மால் முடியாததைச் செய்கிறான்களே என்று.  ரொம்ப முக்கியமான பொறாமை, முதல்வன் முகநூலில் போடும் போஸ்டுகளுக்கு அழகிகளும் பேரழகிகளும் உலகப் பேரழகிகளும் போட்டி போட்டுக் கொண்டு போடும் லைக்ஸ்.  அப்படி ஒவ்வொரு லைக் விழும் போதும் அடியேனுக்கு டிஸ்லைக் தான்.  எனக்குத் தெரிந்த அழகிகள், பேரழகிகளிடம் அவனுக்கு லைக் போடாதீர்கள் என்று கண்டித்தும் இருக்கிறேன்.  … Read more