“சாரு புலம்புகிறார்” – 2

சாரு புலம்புகிறார் என்று எதற்கு சொல்லியிருப்பார்கள் என்று இப்போது புரிகிறது.  ஊட்டி திரைப்பட விழாவுக்குச் சென்ற போது அங்கே என்ன நடந்தது என்று எழுதியிருந்தேன்.  அதுதான் அவர்களுக்குப் புலம்பலாகத் தெரிந்திருக்கும்.  இம்மாதிரி புலம்பலை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன்.  ஏனென்றால், அங்கே என்னை அழைத்தவர்கள் நான் பேசும் போது மைக்கே தரவில்லை.  மேடைக்குப் பின் புறம் – கொல்லைப்புறத்தில் – பத்து பேருக்கு முன்னால் பேசச் சொன்னார்கள்.  மைக் இல்லாமல்.  ஆனால் மிஷ்கினுக்கு வேறு விதமான … Read more

“சாரு புலம்புகிறார்” – 1

தமிழர்கள் யாரும் இலக்கியம் படிப்பதில்லை.  அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.  ஆனால் இலக்கியம் அறியாததன் காரணமாக இவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விலங்கு என்ன செய்கிறது?  இரை தேடுகிறது.  மலஜலம் கழிக்கிறது.  புணர்கிறது.  குட்டி போடுகிறது. நீண்ட நேரம் உறங்குகிறது.  மீண்டும் இரை தேடுகிறது.  இதையே தான் தமிழர்களில் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன.  ஏனென்றால், அவைகளுக்கு வேறு ஆசைகள் இல்லை.  வீடு கட்ட வேண்டியதில்லை.  … Read more