உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று
இன்று காலை நான்கு மணிக்கு எழுந்த கையோடு அராத்து அனுப்பியிருந்த ஒரு சிறுகதையைப் படித்தேன். ஒரு பத்திரிகையில் வெளிவரும் என்று சொல்லியிருந்தார். இப்படி ஒரு காதல் கதையை என் இலக்கிய அனுபவத்தில் படித்ததில்லை. உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று எனத் திண்ணமாகச் சொல்வேன். அராத்து எழுத்தாளராகி விட்டார். முகநூல் இத்தனை பிரசித்தம் ஆவதற்கு முன்பு – ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும் – “நீங்கள் எந்தக் காலத்திலும் எழுத முடியாது” என்று அராத்துவிடம் சொன்னேன். … Read more