மெதூஸாவின் மதுக்கோப்பை – முன்பதிவு
ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். … Read more