பரியேறும் பெருமாள் – தமிழ் சினிமாவில் ஒரு அற்புதம்

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் கதை சொல்லும் முதல் தமிழ்ப் படம். தலித் அழகியலை முன்வைக்கும் முதல் படமும் கூட. ஆனால் பிரச்சாரம் இல்லை. கலைப் படம் என்ற பாவனை இல்லை. ஒரு நொடி கூட அலுப்புத் தட்டவில்லை. ஒரு அற்புதமான உலகத் தரமான படம் பார்த்த திருப்தியைத் தந்தது பரியேறும் பெருமாள். இயக்குனர் மாரி செல்வராராஜ். உனக்கு என் அன்பான முத்தங்கள்