கொண்டாட்டம்
நண்பன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மேடவாக்கம் சென்றிருந்தேன். முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரிலிருந்து கிளம்பினேன். கூகுள் மேப் மூலம் இடத்தை அடைந்த போது பத்து மணி. ஆனால் கார் போய் நின்ற இடம் என் தங்கை வீடு. அதிர்ந்தே போய் விட்டேன். ஏழெட்டு ஆண்டுகளாயிற்று தங்கை வீட்டுக்குப் போய். பார்த்தால் தங்கைக்கு மனக்குழப்பம் ஆகிவிடும். அண்ணன் இன்னும் அப்படியே இருக்காங்களே என்று பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கும். நல்லவேளை, இரவு பத்து மணி ஆகியிருந்ததால் வாசலில் … Read more