சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – R. P. ராஜநாயஹம்

சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – நம் தேசத்து செவ்வியல் இசை வடிவங்கள் – R. P. ராஜநாயஹத்துடன் ஒரு கலந்துரையாடல். நன்றி ஸ்ருதி டிவி.

சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்

கீழே உள்ள குறிப்பு அபிலாஷ் சந்திரன் எழுதியது. தேதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். 9-ஆம் தேதி ஆகஸ்ட். இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் என்ற தலைப்பில் அபிலாஷ் சந்திரன் முகநூலில் பேசுகிறார். நானும் கலந்து கொள்வேன். எல்லோரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள் கிடையாது. குறுக்கே பேசக் கூடாது என்ற சாதாரண நடைமுறை மட்டும்தான். கேள்விகள் இருந்தால் மேலே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களே,சாருவை … Read more

முன்னோடிகள் – 17

கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்குள் நான் இன்னும் நுழையவில்லை.  பதினைந்து தேதிக்கு மேல் ஆரம்பிக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பிக்கலாம்.  புத்தகம் நற்றிணையில் கிடைக்கிறது.  ஒரே தொகுப்பு.  மின்னூல் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.  இணையத்தில் கிடைத்தவரை நாலைந்து கதைகளின் லிங்க்கை நேற்று கொடுத்திருந்தேன்.  வளன் அரசு கோபி பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்.  அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஃபூக்கோவின் Madness and Civilization போலத் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட மிக முக்கியமான … Read more

பூச்சி 112

வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி கொஞ்சம் தாமதம்.  இடையில் எந்த வேலையும் செய்யக் கூடாது என்ற தீர்மானத்தையும் உடைத்து விட்டு குட்டி ரேவதியின் நிறைய அறைகள் உள்ள வீடு என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அற்புதம்.  தொகுப்பு முழுமையும் பற்றி விரிவாக எழுத ஆசை.  இருந்தாலும் ஒரே ஒரு கதை பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன்.  கட்டுவிரியன் என்பது கதைத் தலைப்பு.  இன்றைய இந்தியாவின் கிராமத்து எதார்த்தம்.  இப்போதெல்லாம்தான் சாதிகள் … Read more