2024இல் மனதைக் கவர்ந்த புத்தகங்கள்

அர்ஜுன் ராஜேந்திரன் ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆங்கில இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  இப்போது சில பத்திரிகைகளின் ஆலோசகராக இருக்கிறார்.  2024-இல் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.  அதில் Conversations with Aurangzeb நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு பத்தி உள்ளது.  மற்ற புத்தகங்களில் ஹங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai எழுதிய Satantango நாவலும் இடம் பெறுகிறது.  இந்த நாவல் … Read more

தி டெலிக்ராஃப் இதழில் ஒளரங்ஸேப்

தி டெலிக்ராஃப் நாளிதழ் 2024-இன் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்றாக Conversations with Aurangzeb நாவலைத் தேர்ந்தெடுத்து உள்ளது. “The author challenges historical politics through ‘magic real’ conversations with Mughal emperors, primarily Aurangzeb, who wishes to correct the prevailing prejudicial historiographies of his character.” The Telegraph, டிசம்பர் 27, 2024

புத்தகத் திருவிழா

வரும் இருபத்தேழாம் தேதியிலிருந்து சென்னை புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை அரசியல்வாதிகளின் நாள் என்பதால் அன்று செல்வதில் அர்த்தமில்லை. அரங்குகளிலும் கூட்டம் இருக்காது. எனவே இருபத்தெட்டாம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன். அரங்கு எண்: 540 & 541. சென்ற ஆண்டைப் போல கழிப்பறை அருகில் இருக்கிறதா அல்லது நல்ல இடமா என்று எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. நான்கு மணியிலிருந்து அரங்குகள் மூடும் வரை … Read more

கோவா பேருரையைக் கேட்க வருவோருக்கான ஓர் விண்ணப்பம்…

இந்தப் பேருரைக்கான விஷயங்களை நான் என்னுடைய இருபத்தேழாவது வயதிலிருந்து பயின்று கொண்டிருக்கிறேன். இதுவரை இது பற்றி நான் ஒரு வார்த்தை எழுதியதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மாதம் ஒருமுறை என் நண்பர்களிடம் இவற்றை வழங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது முதல் முதலாக ஒரு பேருரையாகத் தர இருக்கிறேன். இதையெல்லாம் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் பாடமாக எடுத்தால் பல நூறு யூரோக்கள் கிடைக்கும். பணம் எனக்கு வேண்டாம். ஒரு முறை கேட்டால் புரியாது என்பதால் ஒரு குறிப்பேடும் எழுதுகோலும் எடுத்து வாருங்கள் என்று … Read more

அரிய வாய்ப்பு

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டும், க்ராஸ்வேர்ட் புத்தக விருது நான் தான் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb நாவலுக்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாகவும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பொதுவாக தற்போது புத்தக விலை அதிகரித்திருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அது உண்மையும்தான். இரண்டு காரணங்கள்: காகித விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பல தினசரிகள் குறைந்த பட்சம் நாலு பக்கம் குறைத்து விலையையும் அதிகரித்துள்ளன. … Read more

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரை

பொதுவாக என்னுடைய மேடைப் பேச்சு யாரையும் கவர்வதில்லை. சிறப்பாகப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறுவதே இல்லை. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. ஏனென்றால், நான் என்னை ஒரு மிகச் சிறந்த பேச்சாளனாகவே கருதி வருகிறேன். மேடைப் பேச்சுக்குரிய அலங்காரங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாரிடமும் காண இயலாத அற்புதங்களை ஒரு நுண்ணிய வாசகர் என் பேச்சில் கண்டு கொள்ள இயலும். உதாரணமாக, அராத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் … Read more