என்னா சார் டல்லா இருக்கீங்க? (இன்னொருவர் தொடர்கிறார்)

இந்த அடையாறு காந்தி நகர் வீட்டுக்குக் குடிபெயர்ந்து மூணு நாலு மாதம் ஆகியிருக்கும். பழைய சாந்தோம் வீட்டின் தொடர்பு விடவில்லை.  அங்கே வளரும் பத்து பூனைகளுக்குமான உணவு போய்க்கொண்டுதான் இருக்கிறது.  உணவு இடும் வேலை அந்தக் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் அந்தோனியினுடையது.  அதற்கும் அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து விடுகிறேன்.  எல்லாம் அவந்திகா மூலம் நடக்கிறது.  பணம் கொடுப்பது மட்டுமே நான். இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோனி என் வீட்டுக்கு வந்தார், பொங்கல் பணம் வாங்குவதற்காக. … Read more

கண்களுக்குக் கீழே தொங்கிய பை – சிறுகதை

ப்ரியா என் வாசகி. ஐஐடியில் படித்தவள்.  அமெரிக்காவில் ஜாகை.  வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார் கணவர்.  கணவரும் ஐஐடி.  ஆனால் தங்க மெடல் வாங்கியவர்.  ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார்.  மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  காதல் மணம் இல்லை.  பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம்.  ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது … Read more

புருஷன் நாவல் பற்றிய என் உரை

புருஷன் நாவல் பற்றிய என்னுடைய இந்த உரையை ஆற அமரக் கேளுங்கள். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நான் பேசிய உரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இதுபோல் இன்னொரு முறை இன்னொரு நூலுக்கு என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த உரை குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லாமல், எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாக இதுவும் கிடக்கும் என்றால் அது பற்றியும் எனக்குப் புகார் இல்லை. … Read more