க.நா.சு. உரை: 26 ஜூலை

உரை கேட்க வந்து விட்டு ஏற்கனவே நூறு பேர் வந்து இடம் பிடித்து விட்டதால் இடம் இன்றித் திரும்புகின்றவர்கள் சுமார் நூறு பேர் இருக்கும். அதைத் தவிர்க்க நூறுக்கு மேற்பட்டவர்களை இணைக்கும் வசதியைப் பெற முயன்றோம். 20 டாலர் தானே என்று பார்த்தால் 20 டாலரை அழுத்தி உள்ளே போனால் 200 டாலர் என்கிறான். இந்தியர்களிடமிருந்து அமெரிக்கர்களும் கற்றுக் கொள்கிறார்கள் போல. அதனால் பழையபடியே நூறு பேர்தான் பங்கேற்க இயலும். ஆனால் பங்கேற்க இயலாதவர்கள் எனக்கு எழுதினால் … Read more

பூச்சி 109

அன்பு சாரு சார், முதலில் உங்களிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பூச்சி கட்டுரை படித்தவுடன் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அரூ இதழில் வெளிவந்த தங்களின் நேர்காணல் பற்றி எதிர்வினை வரவில்லை என்று எழுதியதுதான் அந்த குற்ற உணர்விற்குக் காரணம். நான் படித்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நள்ளிரவில்  வாசித்துமுடித்ததால் எழுதமுடியவில்லை. அதை அப்படியே மறந்தும் போய்விட்டேன். இன்று பூச்சி கட்டுரையில் குறிப்பிட்டவுடன் குட்டுவிழுந்தது போல் முழிப்புவந்து எழுதுகிறேன். … Read more

க.நா.சு. உரை

வருகின்ற 26-ஆம் தேதி ஸூம் சந்திப்பு இந்திய நேரம் காலை ஆறு மணி. ஞாயிற்றுக் கிழமை. மூன்று மணி நேரம். இரண்டு மணி நேரம் உரை. ஒரு மணி நேரம் கேள்வி பதில். ஆனால் கேள்விகள் இன்னும் எதுவும் வரவில்லை. அதில் எனக்குச் சிறிதும் ஆச்சரியம் இல்லை. ஏன் வரவில்லை என்று என் உரையில் பதில் இருக்கும். அதுதான் உரையின் மையச் சரடு. இடையில் க.நா.சு.வை நீங்கள் கொஞ்சம் வாசிக்க விரும்பினால் கிண்டிலில் கிடைக்கிறது. இன்றுதான் பார்த்தேன். … Read more

வைரமுத்து பற்றி அராத்து

மீடூ என்பது ஆண்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி செக்ஸுவலாக அத்துமீறுவது என்று பார்த்தோம். தமிழகத்தில் இது வைரமுத்து – சின்மயி என்று முன்வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. மீடூவுக்கு ஆதரவாக பேசினாலோ , வைரமுத்துவை எதிர்த்துப் பேசினாலோ , சின்மயி ஆள் என்று முத்திரை. வைரமுத்துவை ஆதரித்துப் பேசினால் திராவிட இன உணர்வாளன் என்று அடையாளம். திராவிட இயக்கங்கள்தான் இந்த மீடூவை ஆதரித்து இருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் ஏனோ இந்த விஷயத்தில் தலைகீழாக அப்படி ஒரு … Read more