சிக்கன் பஜ்ஜியும் சில தேவ கணங்களும்…

தடம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில்: தடம் இதழை இன்று மாலை தமிழ்மகன் தந்தார். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் செம்மையாக இருந்தது. என்னைப்பற்றி சாரு ஒரு கட்டுரை எழுதியிக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அதை படிக்கவிரும்பினேன். ஒரு சிநேகிதி காலையில் போன் செய்து ‘ தடத்தில் சாரு உன்னைப்பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நானே சாரு உன் கவிதைகளைப் பற்றி அவர் ப்ளாக்கில் எழுதியதை படித்துதான் உன்னைத் தேடி வந்தேன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 4)

இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது. இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைதீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்: அன்புள்ள சாரு… இந்த … Read more

லக்ஷ்மி சரவணகுமார் பாராட்டு விழாவில் பேசியது…

முதலில் ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு, நான் எழுதியதை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி. மலைச்சொல் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து கானகன் நாலுக்காக 2016ம் ஆண்டின் சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரை வாழ்த்தும் நிகழ்வில் சாரு நிவேதிதா உரை:

கண்ணுக்குப் புலனாகாத தடையும் ஓர் நற்செய்தியும்…

என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன், என் மீது கண்ணுக்குப் புலனாகாத தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று.  சிலர் நான் ஏதோ இட்டுக் கட்டிச் சொல்கிறேன் என்று நினைப்பார்கள்.  பலமுறை இது பற்றி உதாரணங்களுடன் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். ஆஃப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள சர்வாதிகார  நாடுகளில் எழுத்தாளர்களை அரசாங்கமே நாடு கடத்தும்; இல்லாவிட்டால் கொன்று விடும்; அல்லது அவர்களாகவே தப்பித்து ஐரோப்பா சென்று விடுவார்கள். இடதுசாரி அரசாக இருந்தால் எழுத்தாளர்களை அரசாங்கமே ஐரோப்பிய நாடுகளுக்குத் தூதராக … Read more