பெயர் தேவை

என் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பியவர்கள் ஐந்து பேரின் பெயர் தேவை. புத்தகத்தில் வெளியிட வேண்டும். இன்று அதே ஐசிஐசிஐ கணக்குக்கு ஒரு பெரும் தொகையை அனுப்பியிருக்கும் நண்பரின் பெயரும் தேவை. பெயர் வேண்டாம் என்றால் அதையும் மதிக்கிறேன்.

ஆட்டோஃபிக்‌ஷனிலிருந்து பயோஃபிக்‌ஷனுக்கு…

Dear Charu, Hope you are doing well. ‘காலமும் வெளியும்’ படித்தேன். உங்களிடம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு அமைந்துவிட்டது. தேகம், ஸீரோ டிகிரி, ராஸலீலா போன்ற நாவல்களிலிருந்து, நான்தான் ஒளரங்ஸேப், தியாகராஜா, அசோகா போன்ற நாவல்களுக்கு நீங்கள் வரும்போது, அங்கு ஒரு paradigm shift நடக்கிறது. இந்த shift-ஐ themes மூலமாக அணுகுவதற்குப் பதிலாக genre மூலமாக அணுகுவது, உங்கள் எழுத்தை உள்வாங்கிக் கொள்ள மேலும் உதவும் என்று நம்புகிறேன்.அந்த வகையில், நீங்கள் … Read more

காலமும் வெளியும்…

நான்தான் ஔரங்ஸேப், தியாகராஜா, 1857, அசோகா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சாரு ஒரேயடியாக சரித்திரத்தின் பக்கம் போய் விட்டார்.  நிகழ்கால வாழ்வை எழுதிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது என்ன ஆனது?  ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து, பின்நவீனத்துவம், ஆட்டோஃபிக்‌ஷன் எல்லாம் எக்ஸைலோடு முடிந்து விட்டதா? இதற்கெல்லாம் காரணம், அவர் இப்போது பயணமே செல்வதில்லை.  மனிதர்களை சந்திப்பதே இல்லை.  கிட்டத்தட்ட கமல்ஹாஸன் மாதிரி எதார்த்த வாழ்விலிருந்து விலகி எங்கோ போய் விட்டார்.  கமலுக்கு சந்தான பாரதி சொல்லும் விஷயங்கள்தான் எதார்த்தம், அதேபோல் சாருவுக்கு … Read more

சென்னையில் ஒரு லிட்ரரி சலோன்…

1970களில் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இல்லத்தின் மொட்டைமாடியில் அவர் காகங்கள் என்ற பெயரில் மாதாமாதம் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்தினார். அது அப்போது இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தி.  நான் 1978இல் தில்லி சென்றேன்.  அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த கொல்லிப்பாவை என்ற இதழில் “காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது என் கனவுகளில் ஒன்று” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  நிவேதிதா, புதுதில்லி என்ற பெயரில் வந்திருந்தது அந்தக் கடிதம்.  பிறகு கொல்லிப்பாவையுடன் பெரும் … Read more

ஒரு வேண்டுகோள்

ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தியவர்களின் பெயரை அந்த வங்கி தெரிவிப்பதில்லை. அதனால் பணம் செலுத்தியவர்கள் தங்கள் பெயரையும் முகவரியையும் எனக்குத் தெரியப்படுத்தினால் நல்லது. charu.nivedita.india@gmail.com

சிவந்த வானம்

அநேகமாக பணம் அனுப்பியவர்கள் அனைவரும் தங்கள் பெயரைத் தெரிவித்து விட்டார்கள். நன்றி. நான்தான் ஔரங்ஸேப்… இறுதி கட்ட பிழை திருத்தம் செய்து விட்டேன். நாளை டம்மி காப்பி எடுத்துப் பார்த்து விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் அச்சுக்குப் போய் விடும். சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் புதன்கிழமைக்குள் பணம் அனுப்பி பெயரையும் தெரிவியுங்கள். இந்தத் தொகை அனைத்தும் இப்போதைய சீலே பயணத்துக்குத்தான் பயன்படும். வீசா கிடைத்தால் பாரிஸ் போய் … Read more