விஷமும் மருந்தும்…
இலக்கியம் என்பது விஷமும் மருந்துமாக செயல்படுகிறது. ஹோமியோபதி மருந்து மாதிரி. ஹோமியோபதி மருந்தின் மூலகங்களைப் பற்றிப் படித்தால் அவற்றில் பெரும்பாலானவை கொடிய விஷம் என்பதை அறிவீர்கள். கடுகளவு உண்டாலே மரணம்தான். ஆனால் அதைப் பல நூறு முறை நீர்த்துப் போகச் செய்துதான் நமக்கு மருந்தாகத் தருகிறார்கள். அதையும் நூறு மில்லி நீரில் பத்து சொட்டுதான் சேர்க்க வேண்டும். அப்படித்தான் இலக்கியமும். அது தெரியாமல் அதில் காலை விட்டால் அழிவுதான். எண்பதுகளில் என்னோடு ஒரு நண்பர் பழகினார். சராசரியாக … Read more