கடவுளும் சைத்தானும்…

அன்பு சாரு, உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறவன் என்றாலும், உங்களுக்குக் கடிதம் எழுதியதில்லை. கோணல் பக்கங்கள் வழி நீங்கள் எனக்கு அறிமுகம். ஜீரோ டிகிரி உள்ளிட்ட உங்களின் புனைவு/அபுனைவு ஆக்கங்களை வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குறித்து எழுத வேண்டும் எனத் தோன்றியதே இல்லை. உங்கள் இலக்கிய வடிவம் தமிழின் தனித்துவமான ஒன்று என்றாலும், அவ்வடிவம் எனக்கு உவப்பானது இல்லை. தொடர்ந்து நீங்கள் தக்க வைத்திருக்கும் ’இலக்கிய இளமை’க்காகவே உங்களைத் தொடர்கிறேன். யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள … Read more

பிராணிகளோடு இரண்டு வாரம்…

எப்போதுமே என் விருப்பத்தின் பேரில் வாழ முடியவில்லையே என்ற குறை எனக்குள் உண்டு.  இப்போதும் எப்போதும் என் விருப்பம் வெளியிலிருந்து வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு எப்போதும் எழுதுவது, படிப்பது.  ஆனால் பெரும்பகுதி நேரம் பூனை பராமரிப்பில் செலவாகிறது.  பாண்டிச்சேரியை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒரு நண்பர் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு விஸ்தாரமான குடிசை கட்டி வைத்திருக்கிறார்.  பார்ப்பதற்கு அந்தக் காலத்துப் பேரரசர்களின் கூடாரம் போல் இருக்கும். அரவம் நெருங்காமல் இருக்க சுற்றி வர நந்தியாவட்டைச் செடிகளும் … Read more

நூறு – 1

நேற்று இதே நேரம் ஆத்மார்த்தி போனில் பேசினார். ஆத்மார்த்தி என்பதால் எடுத்தேன். இல்லாவிட்டால் இந்த நேரத்தில் போனைத் தொடுவதில்லை. உங்களுக்குப் பிடித்த நூறு பேரைப் பற்றி எழுதுங்கள் என்றார். ஆறு ஏழு பெயர்களைக் குறிப்பிட்டு முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் இல்லையா, அதன் விளைவு. அந்த நூறு பேர் பட்டியலில் முதலில் வருபவர் ஆதி சங்கரர். 1724-இல் பிறந்து 1804-இல் காலமானவர் தத்துவவாதி இம்மானுவல் காண்ட் (Immanual Kant).  அவரது Critique of Pure Reason என்ற … Read more

Collectors copy

நன்கொடையும் இலவசமும் குறிப்பின் தொடர்ச்சி இது. எக்ஸைல் முதல் வடிவம் பத்து பிரதிகளும் தீர்ந்து விட்டன. என் நூலகத்தின் இட நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு. இப்போது ஒரு அரிய நூல் கிடைத்தது. உங்களுக்குத் தெரியும், உயிர்மையில் என் புத்தகங்கள் வரும் வரை என் புத்தகங்களுக்கு நானேதான் பதிப்பாளன். அவ்வகையில் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு பதிப்பகப் பெயரில் வெளியிடுவேன். முதல் புத்தகமான ஜேஜே சில குறிப்புகள் – ஒரு விமர்சனம் என்ற நூலை சாரு பப்ளிகேஷன்ஸ் … Read more

நன்கொடையும் இலவசமும்…

2011இல் வெளிவந்த எக்ஸைல் நாவலின் முதல் வடிவம் பத்து பிரதிகள் என்னிடம் உள்ளன. தேவைப்படுவோர் எழுதவும். அனுப்பி வைக்கிறேன். அது இனிமேல் மறுபிரசுரம் ஆகாது. எனவே collectors’ copyதான். விலை இல்லை. நன்கொடைதான். எழுதுங்கள். மேற்கண்ட குறிப்பில் உள்ள நன்கொடை என்ற வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விதத்தில் எழுதி விட்டேன். அதற்காக வருந்துகிறேன். நண்பர்கள் கோபப்பட வேண்டாம். நன்கொடை என்ற வார்த்தையைப் புத்தக உலகில் பலரும் கேள்விப்பட்டதில்லை என்பதையே எனக்கு வந்த எக்கச்சக்கமான கடிதங்கள் தெரிவிக்கின்றன. … Read more

மதுவும் புத்தகமும்

மேற்கண்ட தலைப்பில் ஒரு ப்ளாக். அதில் எழுதுபவர் மதுநிகா சுரேஷ். மதுவின் மங்கியதோர் நிலவினிலே மிக வித்தியாசமான நிலவியலைக் கொண்டு இயங்குகிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். மங்கியதொரு நிலவினிலே ….. – மதுவின் பக்கங்கள் (madhuvumputhagamum.blog)