அராத்துவின் புதிய பன்றி கவிதை

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினால் ஸ்ரீராமுக்கு ஒரே ஜாலிதான் போல. நெரூதாவின் நாய்க் கவிதையை எனக்கு அனுப்பினார். மணி மாலை 4.46. என் பொருட்டு எழுதியதாகத் தெரியவில்லை. உடனே அராத்துவுக்கு அனுப்பி இதற்குப் பன்றி கவிதை தேவை என்று எழுதினேன். 5.02க்கு அவர் பன்றி கவிதை அனுப்பினார். எனக்கு நகுலனும் சுந்தர ராமசாமியும்தான் ஞாபகம் வருகிறார்கள். இப்படி எழுதுவதற்கு எத்தனை நாய்க் கவிதை வரப் போகிறதோ, பயமாக இருக்கிறது. சும்மா கிடந்த சீனி நெரூதா புண்ணியத்தால் பெரும் கவியாகி … Read more

ஃபாத்திமா பாபு குரலில் மாயமான் வேட்டை- இன்று இரவு

https://m.facebook.com/story.php?story_fbid=4312954222087633&id=100001192933610&sfnsn=wiwspwah மேற்கண்ட சுட்டியின் மூலம் இன்று இரவு ஒன்பது இருபதுக்கு இணைந்தால் ஃபாத்திமா பாபுவின் குரலில் மாயமான் வேட்டை கதையைக் கேட்கலாம். நானும் கலந்து கொள்கிறேன்.

பேரரசனோடு பழகுதல்

ஒரு சிறுபத்திரிகையைச் சேர்ந்த நண்பர்.  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம்.  பதினைந்து ஆண்டுகளாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார்.  கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கும்.  எந்த கோஷ்டியையும் சேராதவர்.  எனக்குத் தொடர்ந்து தன் பத்திரிகையை அனுப்பி வருகிறார்.  அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமே என்று பதினைந்து ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன்.  கைம்மாறு என்ன கைம்மாறு?  கைக்காசையும் நண்பர்களிடமிருந்து பணம் திரட்டியும் பத்திரிகை நடத்தி வருபவருக்கு ஒரே ஒரு தேவைதான் இருக்க முடியும்.  அந்தத் தேவையை … Read more

இது போதும்…

அன்புள்ள சாரு நிவேதிதா, நான்  ஆரம்ப கட்ட வாசகன் ஆகையால் எனக்கு உலக இலக்கிய புத்தகங்கள் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.தற்போது உங்களையும் மற்றும் ஜெயமோகன், ராமகிருஷ்ணன்  எழுத்துக்களை படித்து வருகிறேன்.எனக்கு மேலும் இலக்கிய அறிமுகம் தேவை.ஆகையால் உலக இலக்கிய புத்தக பெயர்களை வரிசைப்படுத்தி தரவும். இப்படிக்கு தங்கள் அன்புள்ள வாசகன். மூவரையும் தொடருங்கள். அது போதும். சாரு

புத்தரும் விநாயகரும்: சிறுகதை: அராத்து

புத்தர் : மிஸ்டர் விநாயகா , நான் தான் நீ என்கிறார்கள். அம்மா அப்பாவைச் சுற்றி விட்டு , டகால்டி செய்து என் சகோதரனை ஏமாற்றும் பழக்கம் எனக்கு இல்லை . நெஞ்சம் பற்றி எரிகிறது விநாயகர் : ஹேய் , ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரியாதா ? புத்தர் : ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரிந்த ஆட்கள்தான் இப்படி விளையாடுகிறார்கள். விநாயகர் : கூல் ப்ரூ , அராத்துன்னு ஒரு ஆள் இருக்கான். … Read more