நான்தான் ஔரங்கசீப்… ஒரு முக்கியமான விளக்கம்

வாசக நண்பர்களுக்கு – குறிப்பாக முஸ்லீம் நண்பர்களுக்கு என் அன்பான விண்ணப்பம் ஒன்று உள்ளது. ஔரங்கசீப்பைப் படியுங்கள். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இறைவனின் கருணை மழை தங்கள் மீது அருளும், பொழியும். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். ஔரங்கசீப் ஒரு நாவல். நிஜமான ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதை ஒவ்வொரு எழுத்திலும் ஞாபகம் கொள்ளுங்கள். இந்த நாவலை நான் எழுத வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தை ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்க … Read more

என் வாசக நண்பர்களுக்கும், முஸ்லீம் நண்பர்களுக்கும்,

Bynge.in என்ற செயலியில் என்னுடைய நாவல் “நான்தான் ஔரங்கசீப்…” தொடராக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.  ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாரம் மூன்று முறை வருகிறது.  ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை மதிப்புரைகள் வந்துள்ளன என்ற விவரங்களும் தினந்தோறும் எனக்கு வந்து விடுகின்றன.  அவற்றை நான் பார்ப்பதில்லை.  இன்று பார்த்தேன்.  இதுவரை 36330 வாசிப்புகள்.  நேற்று 1678 பேர் வாசித்திருக்கிறார்கள்.  இதுதான் ஒருநாளில் மொத்தமாக வாசித்தவர்களின் எண்ணிக்கை. என் பெயருக்காக … Read more

ஔரங்கசீப்பை முடித்துக் கொள்ளலாமா?

இன்று காலை இப்படி ஒரு கடிதம் வந்தது. எழுதியவரின் பெயரை எப்படியோ தொலைத்து விட்டேன். மெஸஞ்ஜரில் வந்தது. ஔரங்கசீப் கீழ்த்தரமான பதிலைச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. தான் செய்த அத்தனை செயல்களும் பாபகரமானவை, ஹராமானவை என்று தன் கடிதங்களில் புலம்பித் தள்ளியிருக்கிறார் ஔரங்கசீப். இது போன்ற கடிதங்கள் ஔரங்கசீப்பின் பெயரை மாற்றி கலாம் பெயரை வைப்பவர்களுக்கும், மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஔரங்கசீப்பை கொடூரமான வில்லனாகக் காண்பிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும்தான் பயன்படும். இதுபோல் இன்னும் கடிதம் வந்தால் தொடரை … Read more

வசந்த் சாய் – பாயசம்

நவரசாவில் இடம் பெற்றிருக்கும் எட்டு படங்களையும் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து விட்டு அந்த எட்டையும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் நண்பர் வசந்த்தின் பாயசத்தை மட்டும் இன்னும் இரண்டொரு நாள் கழித்துப் பார்க்கலாம் என்று திட்டம். ஔரங்கசீப் நாவலில் மூழ்கிக் கிடப்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இடையில் செய்த ஒரு பிழையால் உடனடியாக வசந்த் சாயின் பாயசம் மட்டும் பார்த்தேன். என்ன பிழை என்றால், பிரபு காளிதாஸின் விமர்சனத்தை என் முகநூல் பக்கத்தில் ஷேர் … Read more

பாலகிருஷ்ணனிடமிருந்து பாரதக் கதைகள்…

விவரங்கள் விளம்பரத்திலேயே இருக்கின்றன. பாலகிருஷ்ணன் ஒரு புகழ் பெற்ற நாடகக் கலைஞர். அதே சமயம் இதிகாசங்களை விளக்குவதில் மாஸ்டர். அவருடைய முந்தைய தொடர் சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். பிரமாதமாக இருந்தது. இணைந்து கொள்ளுங்கள். ஐந்து உரைகளுக்கு 1000 ரூ. தான். விவரம் இதில். நானும் பணம் கட்டி விட்டேன். உரை ஆங்கிலத்தில் இருக்கும். புரியும் விதமான ஆங்கிலம்தான். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் அல்ல.